நாகப்பட்டினம் மாவட்டம், வல்லம் கிராம நிர்வாக அலுவலர் (விஏஓ) ராஜாராமன் (38) செல்லூர் கிழக்கு கடற்கரை சாலையில் தலையில் கல்லால் தாக்கப்பட்ட நிலையில் சடலமாக கிடந்தார். இந்த சம்பவத்தை பார்த்த அக்கம்பக்கத்தினர் உடனடியாக இது குறித்து வெளிப்பாளையம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்துக்கு துணை போலீஸ் சூப்பிரண்டு ராமச்சந்திர மூர்த்தி மற்றும் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுப்ரியா உடனே சென்று விசாரணை நடத்தினர். பின்னர் ராஜாராமனின் உடலை ஒரத்தூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பினர்.
போலீசார் விசாரணையில், ராஜாராமன் கடந்த 2024ம் ஆண்டு பணியாற்றும் போது பட்டா மாறுதலுக்காக ரூ.1000 லஞ்சம் பெற்றது கண்டுபிடிக்கப்பட்டது. அதன்படி பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். சம்பவ இடத்தில் ரத்தக்கறை படிந்த பெரிய கல் இருந்தது, இதனால் போலீசார், ராஜாராமனை தலையில் தாக்கி கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்று சந்தேகிக்கின்றனர்.
இரு திருநங்கைகள் நிவேதா மற்றும் ஸ்ரீகவி, மது போதையில் படுத்திருந்த ராஜாராமனிடம் இருந்து பணம், செல்போன், மோதிரம் பறித்து, தலையில் கல்லை வைத்து கொலை செய்ததாக போலீசார் கூறினர். விசாரணைக்குப் பிறகு இருவரும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செல்வகுமாரின் உத்தரவின் பேரில் 5 தனிப்படைகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். ராஜாராமனின் உறவினர்கள், கொலைச் சந்தேகம் தீரும் வரை உடலை எடுத்துக் கொள்ள மாட்டோம் என்று அறிவித்துள்ளனர்.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்
ஐப்பசி மாசத்துல இந்த 6 ராசிக்காரர்களுக்கும் அதிர்ஷ்ட மழை
ஐப்பசியில இந்த 6 ராசிக்காரங்க யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போடாதீங்க
வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!