உஷார்... டிஜிட்டல் தங்கம் வாங்கறீங்களா... செபி எச்சரிக்கை!
Dinamaalai November 10, 2025 12:48 PM

டிஜிட்டல் தங்கத்தில் முதலீடு செய்வோருக்கு எச்சரிக்கை மணி அடித்துள்ளது செபி. மொபைல் ஆப்ஸ், ஆன்லைன் தளங்கள் வழியாக தங்கம் வாங்கும் முதலீட்டாளர்கள் மிகுந்த கவனத்துடன் இருக்க வேண்டும் என்று இந்திய பங்கு மற்றும் பரிவர்த்தனை வாரியம் அறிவுறுத்தியுள்ளது.

கடந்த இரண்டு ஆண்டுகளில் தங்கத்தின் விலை தொடர்ந்து உயர்வடைந்ததால், பங்குச்சந்தை சரிவினால் கவலைடைந்த பல முதலீட்டாளர்கள் டிஜிட்டல் தங்கம் உள்ளிட்ட மாற்று துறைகளில் அதிகமாக முதலீடு செய்து வருகின்றனர். குறிப்பாக ரூ.10 முதல் முதலீடு செய்யலாம் என விளம்பரங்களால் ஈர்க்கப்பட்ட பொதுமக்கள், PhonePe, Paytm உள்ளிட்ட செயலிகள் மூலம் சிறு தொகைகளாக தங்கத்தை சேமிக்கின்றனர்.

ஆனால், இந்த முதலீடுகளில் அனைத்து வகைகளும் பாதுகாப்பானவை அல்ல என செபி எச்சரிக்கிறது. ஏனெனில், சில டிஜிட்டல் தங்க திட்டங்கள் ரிசர்வ் வங்கி அல்லது செபி கண்காணிப்பில் இல்லாமல் செயல்படுகின்றன. இதனால் முதலீட்டு பாதுகாப்பு குறித்த கேள்விகள் எழுந்துள்ளன.

இந்நிலையில் பொருளாதார நிபுணர் சோம வள்ளியப்பன் தெரிவித்ததாவது: மியூச்சுவல் ஃபண்ட் வழி தங்க முதலீடு, தங்க டெரிவேட்டிவ்ஸ், SGB (சார்வரன் கோல்ட் பாண்ட்) போன்றவை அரசு மற்றும் செபி கட்டுப்பாட்டில் உள்ளதால் பாதுகாப்பானவை. ஆனால் ‘Digi Gold’ போன்ற சில திட்டங்கள் நம்பிக்கை அடிப்படையில் இயங்குவதால், அவற்றை தேர்வு செய்யும் போது மிகுந்த கவனம் தேவைப்படுகின்றது.

சில நகைக் கடைகள் செயலி மூலம் சிறுதொகை முதலீடு செய்து பின்னர் தங்க ஆபரணமாக பெற்றுக்கொள்ளும் திட்டங்களையும் இயக்குகின்றன. இந்த திட்டங்களும் RBI கண்காணிப்பில் இல்லாததால் அபாயம் உள்ளதாக நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.

அதனால், டிஜிட்டல் தங்கத்தில் முதலீடு செய்ய விரும்புவோர் நம்பகமான நிறுவனங்களையும் அரசு அங்கீகாரம் பெற்ற முதலீட்டு வழிகளையும் தேர்வு செய்வதே பாதுகாப்பு என நிபுணர்கள் அறிவுறுத்துகின்றனர்.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

ஐப்பசி மாசத்துல இந்த 6 ராசிக்காரர்களுக்கும் அதிர்ஷ்ட மழை

ஐப்பசியில இந்த 6 ராசிக்காரங்க யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போடாதீங்க

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.