கற்றாழை ஜெல் மற்றும் தக்காளி பேஸ்ட் எதை குணமாக்கும் தெரியுமா ?
Top Tamil News November 10, 2025 09:48 AM

பொதுவாக பலருக்கு வயது கூட கூட ,கருமை நிற திட்டுகள் முகத்தில் தோன்றும் .இந்த கருமை திட்டுகள் பார்ப்பதற்கு அசிங்கமாக தோன்றும் .இந்த கருமையை போக்க சில இயற்கையான வழிகள் உண்டு .அது பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்  

1.முகத்தில் இருக்கும் கருமையை போக்க  எலுமிச்சை சாறு மற்றும் நீரை சரிசம அளவில் எடுத்து, கருமையாக இருக்கும் சருமத்தில் தடவி 5 நிமிடம் கழித்து கழுவுங்கள். 
2. எலுமிச்சை சாறு பயன்படுத்திய பின், இறுதியில் தவறாமல் மாய்ஸ்சுரைசர் எதையேனும் பயன்படுத்துங்கள். 
3.இந்த மாய்ஸ்சுரைசர் அதில் உள்ள சிட்ரிக் அமிலத்தால் ஏற்படும் கடுமையான வறட்சியைத் தடுக்கலாம்.
4.முகத்தில் உள்ள கருமையை போக்க ஒரு பௌலில் 1 டேபிள் ஸ்பூன் வெள்ளரிக்காய் சாறு, எலுமிச்சை சாறு மற்றும் ரோஸ் வாட்டர் சேர்த்து ஒன்றாக கலந்து, சருமத்தில் தடவுங்கள். 
5.இப்படி செய்வதன் மூலம், வெயிலால் கருமையான சருமத்தை வெள்ளையாக்கலாம்.
6.அடுத்து 2 டேபிள் ஸ்பூன் கடலை மாவு மற்றும் பாலுடன் 1 சிட்டிகை மஞ்சள் தூள் மற்றும 1 டேபிள் ஸ்பூன் ரோஸ் வாட்டர் சேர்த்து கலந்து பேஸ்ட் செய்து, கொள்ளுங்கள் 
7.இந்த கலவையை சருமத்தில் தடவி 15-20 நிமிடம் ஊற வைத்து, பின் நீரில் கழுவ வேண்டும். இதன் மூலமும் சரும கருமை அகன்று வெண்மையாக மாறும் 
8.அடுத்து முகத்தின் கருமை போக்க 1 டேபிள் ஸ்பூன் மைசூர் பருப்பை நீரில் ஊற வைத்து, பேஸ்ட் செய்து கொள்ள வேண்டும். 
9.பின் அத்துடன் கற்றாழை ஜெல் மற்றும் தக்காளி பேஸ்ட் சேர்த்து கலந்து, கருமையான பகுதியில் தடவி வாருங்கள் 
10.பின்னர் 30 நிமிடம் ஊற வைத்து, பின் குளிர்ந்த நீரில் முகத்தை கழுவ வேண்டும்.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.