அவளும் நானும்… 9 ஆண்டுகளைக் கடந்தது அச்சம் என்பது மடமையடா படம்!
TV9 Tamil News November 12, 2025 05:48 AM

தமிழ் சினிமாவில் கடந்த 11-ம் தேதி நவம்பர் மாதம் 2016-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியான படம் அச்சம் என்பது மடமையடா. இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனன் எழுதி இயக்கிய இந்தப் படம் ரொமாண்டிக் ஆக்‌ஷன் த்ரில்லர் படமாக திரையரங்குகளில் வெளியானது. நடிகர் சிலம்பரசன் நாயகனாக நடித்து இருந்த இந்தப் படத்தில் அவருக்கு ஜோடியாக நடிகை மஞ்சிமா மோகன் நாயகியாக நடித்து இருந்தார். இவர்களுடன் இணைந்து நடிகர்கள் பாபா சேகல், சதீஷ் கிருஷ்ணன், டேனியல் பாலாஜி, சுதன்ஷு பாண்டே, நாகிநீடு, ஆர்.என்.ஆர்.மனோகர், அஞ்சலி ராவ், கிரிஷ் மேனன், வேல்ராஜ், மேத்யூ வர்கீஸ், சுஜாதா பஞ்சு, வசந்தா, சாலக்குடி சுனில், கே கே மேனன், பிரசாத் அதல்யே, விஸ்வநாத், பிரியா ராஜ்குமார், சாம்ராக்னி, சரண் பாஸ்கர், ஆர். ஷ்யாம், விக்கி விஜய், ஆர்.எஸ்.கார்த்திக், அம்ருத், ரிஷப், ஆனந்தி, சந்துரு, மதுரை மோகன், ஜெயதேவ் சுப்ரமணியம், சாம்சன் டி வில்சன், எலியாஸ் கான், சுனிதா ஓஜா, புல்லட் பாபு, எஸ் சயாத், கலீல் எல், அனில் பாலா, பிர்லா போஸ், பிரயாஸ் மான், கௌதம் வாசுதேவ் மேனன் என பலர் இந்தப் படத்தில் நடித்து இருந்தனர்.

மேலும் இந்தப் படத்தை பிரபல தயாரிப்பு நிறுவனமான ஒன்ட்ராகா என்டர்டெயின்மென்ட் சார்பாக தயாரிப்பாளர்கள் வெங்கட் சோமசுந்தரம் மற்றும் ரேஷ்மா கட்டாலா ஆகியோர் இணைந்து தயாரித்து இருந்தனர். படம் ரசிகர்களிடையே கலவையான விமர்சனத்தைப் பெற்றாலும் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் இசையில் வெளியான பாடல்கள் அனைத்தும் ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது. இந்தப் படம் திரையரங்குகளில் வெளியாகி இன்றுடன் 9 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது.

அச்சம் எனப்து மடமையடா படத்தின் கதை என்ன?

சிலம்பரசனின் தங்கை உடன் படிப்பவர் தான் நடிமை மஞ்சிமா மோகன். மஞ்சிமா மோகனை முதன்முறையாக பார்த்த போதே சிலம்பரசனுக்கு அவர் மீது காதல் ஏற்பட்டுவிடும். இந்த நிலையில் சிலம்பரசன் ரோட் ட்ரிப் செல்லும் போது அவருடன் மஞ்சிமா மோகனும் வருவதாக கூறி செல்வார். இருவரும் ஒன்றாக பயணித்துக்கொண்டிருக்கும் போதே சிலம்பரசன் மீது மஞ்சிமா மோகனுக்கும் விருப்பம் ஏற்படுகிறது.

Also Read…. காமெடி வெப் சீரிஸ் பார்க்கனுமா? அப்போ ஹார்ஸ்டார் ஓடிடியில் உள்ள இந்த சட்னி சாப்பாரை மிஸ் செய்யாதீர்கள்

மிகவும் சந்தோசமாக ரோட் ட்ரிப் சென்று கொண்டிருக்கும் போது ஒரு லாரி இவர்களின் பைக்கை இடித்து விபத்து ஏற்படுகின்றது. முதலில் விபத்து என்று நினைத்த சிலம்பரசனுக்கு பின்பு தான் தெரியவந்தது அது மஞ்சிமாவை கொலை செய்வதற்காக வந்தவர்கள் என்று. மஞ்சிமாவின் தந்தை தான் அந்த கொலை செய்யும் நபர்களை அனுப்பியவர் என்பதை தெரிந்துகொண்ட சிலம்பரசன் இறுதியில் அவரை எப்படி காப்பாற்றினார் என்பதே படத்தின் கதை.

Also Read…. அரண்மனையாக மாறிய பிக்பாஸ் வீடு… இரண்டு சாம்ராஜ்யங்களாக பிரிந்து போட்டி போடும் போட்டியாளர்கள்

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.