சென்னையில் இன்று காலை வெடிகுண்டு மிரட்டல்கள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தின. டிஜிபி அலுவலகத்திற்கு மின்னஞ்சல் மூலம் வந்த தகவலில், நடிகர் அஜித் வீடு, சத்தியமூர்த்தி பவன் மற்றும் ஈவிபி ஃபிலிம் சிட்டி ஆகிய இடங்களில் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டிருந்தது.

இதையடுத்து போலீசார் உடனடியாக வெடிகுண்டு நிபுணர்கள் மற்றும் மோப்ப நாய்களை அழைத்து சென்று மூன்று இடங்களிலும் தீவிர சோதனை நடத்தினர். சோதனையில் எங்கும் வெடிகுண்டு எதுவும் இல்லையென தெரியவந்தது. இதனால் அது வெறும் புரளி என உறுதி செய்யப்பட்டது.

மேலும், நடிகர் எஸ்.வி. சேகர் மற்றும் நடிகை ரம்யா கிருஷ்ணன் வீடுகளுக்கும் இன்று இதேபோன்ற வெடிகுண்டு மிரட்டல்கள் வந்துள்ளன. தொடர்ச்சியாக வரும் இத்தகைய மின்னஞ்சல் மிரட்டல்களை யார் அனுப்புகின்றனர் என்பதை கண்டறிய போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்
ஐப்பசி மாசத்துல இந்த 6 ராசிக்காரர்களுக்கும் அதிர்ஷ்ட மழை
ஐப்பசியில இந்த 6 ராசிக்காரங்க யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போடாதீங்க
வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!