8.2% வரை வட்டி வழங்கும் அசத்தல் முதலீட்டு திட்டங்கள்.. என்ன என்ன?
TV9 Tamil News November 12, 2025 05:48 AM

மனிதர்களின் வாழ்வில் பொருளாதாரம் (Economy) மிகவும் முக்கியமான ஒன்றாக உள்ளது. இந்த நிலையில், எதிர்பாராத சூழலில் ஏற்படும் நிதி தேவைகளை பூர்த்தி செய்துக்கொள்ள முடியாத சூழல் உருவாகும். இதன் காரணமாக தான் பெரும்பாலான நபர்கள் சேமிப்பு (Saving) அல்லது முதலீட்டு (Investment) திட்டத்தில் முதலீடு செய்ய விரும்புகின்றனர். அந்த வகையில், பாதுகாப்பான மற்றும் அதிக வட்டி வழங்கும் சில சேமிப்பு மற்றும் முதலீட்டு திட்டங்கள் குறித்து விரிவாக பார்க்கலாம்.

8.2 சதவீதம் வரை வட்டி வழங்கும் முதலீட்டு திட்டங்கள்

அரசு அஞ்சலகங்கள் மூலம் பல வகையான முதலீட்டு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இந்த நிலையில், 8.2 சதவீதம் வரை வட்டி வழங்கும் சில திட்டங்கள் குறித்து விரிவாக பார்க்கலாம்.

சுகன்யா சம்ரித்தி யோஜனா

அஞ்சலகங்கள் மூலம் அரசு செயல்படுத்தும் அசத்தலான முதலீட்டு திட்டங்களில் இந்த சுகன்யா சம்ரித்தி யோஜனா திட்டம் (Sukanya Samriddhi Yojana Scheme) முதன்மையாக உள்ளது. பெண் குழந்தைகளுக்கான சிறப்பு திட்டமாக உள்ள இதற்கு ஆண்டுக்கு 8.2 சதவீதம் வட்டி வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தில் ஒரு ஆண்டுக்கு ரூ.250 முதல் ரூ.1.5 லட்சம் வரை முதலீடு செய்ய அனுமதி வழங்கப்படுகிறது. இதன் முதிர்வு காலம் 21 ஆண்டுகள் ஆகும்.

இதையும் படிங்க : Gold Price : இரண்டு வாரங்களாக சரிவில் இருக்கும் தங்கம்.. முதலீடு செய்ய இது சரியான நேரமா?

பொது வருங்கால வைப்பு நிதி திட்டம்

அஞ்சலங்கள் மூலம் செயல்படுத்தும் அசத்தலான திட்டம் தான் பொது வருங்கால வைப்பு நிதி (PPF – Public Provident Fund). இந்த திட்டத்திற்கு ஆண்டுக்கு 7.1 சதவீதம் வட்டி வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தில் ரூ.500 முதல் ரூ.1.5 லட்சம் வரை முதலீடு செய்யலாம்.

தேசிய சேமிப்பு சான்றிதழ்

அஞ்சல திட்டங்களில் அசத்தலான ஒரு திட்டம் தான் தேசிய சேமிப்பு சான்றிதழ் (NCS – National Saving Certificate). இந்த திட்டத்திற்கு ஆண்டுக்கு 7.7 சதவீதம் வட்டி வழங்கப்படுகிறது. இந்த நிலையில், இந்த திட்டத்தில் முதலீடு செய்வதற்கான எந்த வித வரம்பும் விதிக்கப்படுவதில்லை.

இதையும் படிங்க : Digital Gold, E-gold வாங்கலாமா? பாதுகாப்பானதா? SEBI விடுத்த எச்சரிக்கை!!

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.