கொளத்தூரில் 4,379 போலி வாக்காளர்கள்.. SIR-யைப் பற்றியே உதயநிதிக்கு தெரியாது - நிர்மலா சீதாராமன் ஆவேசம்!
Dinamaalai November 13, 2025 09:48 AM

வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் (SIR) தொடர்பாக தமிழகத்தில் அரசியல் பரபரப்பு அதிகரித்துள்ள நிலையில், மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார். கோவையில் பத்திரிகையாளர்களை சந்தித்த அவர், “SIR நடவடிக்கையை எதிர்த்து தி.மு.க. கொடி பிடித்து போராடுவது பொதுமக்களை ஏமாற்றுவதற்கான முயற்சி” என தெரிவித்தார்.

“2000-க்கு முன் 10 முறை, அதன்பிறகு 3 முறை SIR நடைமுறைப்படுத்தப்பட்டிருக்கிறது. இப்போது மட்டும் இது ஏன் எதிர்ப்பு? பா.ஜ.க. புதிய பூதம் கொண்டு வந்தது போல திடீரென போராட்டம் நடத்துவது ஏன்?” என அவர் கேள்வி எழுப்பினார்.

உதயநிதி ஸ்டாலினை குறிவைத்து, “SIR என்றால் Special Intensive Revision. ஆனால் உதயநிதி அதையே Restriction என்று கூறுகிறார். வாக்காளர் பட்டியல் திருத்தம் என்றால் என்ன என்பதே தெரியாமல் கருத்து தெரிவிக்கிறார்” என்றார்.

கொளத்தூர் தொகுதி குறித்து பேசும் போது, “அந்த தொகுதியில் 4,379 போலி வாக்காளர்கள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இது போன்ற போலி வாக்குகளை நீக்குவதற்கான சட்டப்பூர்வமான பணியே SIR. இதற்கு எதிர்ப்பதோடு தி.மு.க. அரசு மக்களை தவறாக வழிநடத்துகிறது” என குற்றம் சாட்டினார்.

மேலும், “ஒரு இடத்தில் கூட வருமான வரித்துறை பதிவு செய்த வழக்குகள் பொய்யாகவில்லை” என நிர்மலா சீதாராமன் வலியுறுத்தினார்.தமிழக அரசும் தி.மு.க. தலைவர்களும் SIR நடவடிக்கை ஜனநாயகத்துக்கு எதிரானது எனவும், வாக்குரிமை பறிப்பதற்கான முயற்சி எனவும் தொடர்ந்து குற்றஞ்சாட்டி வரும் நிலையில், இந்த புதிய குற்றச்சாட்டு மாநில அரசியல் சூழலை மேலும் தீவிரப்படுத்தியுள்ளது.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

ஐப்பசி மாசத்துல இந்த 6 ராசிக்காரர்களுக்கும் அதிர்ஷ்ட மழை

ஐப்பசியில இந்த 6 ராசிக்காரங்க யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போடாதீங்க

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.