தமிழக வெற்றிக் கழக மாநில இணைச் செய்தி தொடர்பாளர் ரமேஷ் விடுத்துள்ள கண்டன அறிக்கையில், "திருச்சி பீம நகரில் காவலர் குடியிருப்பு வளாகத்தில் வைத்தே தாமரை செல்வன் என்ற இளைஞர் வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளார்.
விழுப்புரம் பிரம்ம தேசத்தில் பள்ளி மாணவியிடம் அத்துமீறி நடந்த காவலர் போக்சோவில் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்த மக்கள் விரோத திமுக ஆட்சியில் காவல்துறையிடம் தஞ்சம் புகுந்தாலும் பாதுகாப்பு இல்லை, ஒரு சில காவலர்களால் போது மக்களுக்கு பாதுகாப்பு இல்லை, இன்னும் சில இடங்களில் காவலர்களுக்கே பாதுகாப்பு இல்லை.
காவல் துறையை கையில் வைத்திருக்கும் முதல்வர் அவர்களோ கேரம் விளையாடவும், சினிமா படம் பார்க்கவும் தான் இருக்கிறார். துணை முதல்வர் இன்ஸ்டாகிராமில் தூங்குகிறார்.
கயவர்களின் கூடாரமாக தமிழ்நாடு மாறியுள்ளதற்கான அனைத்து பொறுப்பும் முதல்வரையே சேரும்! முடிந்தால் மக்கள் பணி செய்து பழகுங்கள்! இல்லையேல் ஆட்சியிலிருந்து விலகுங்கள்" என்று தெரிவித்துள்ளார்.