பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத் கோர்ட்டு வளாகம் அருகே ஒரு கார் சென்று கொண்டிருந்தது. அப்போது திடீரென பயங்கர சத்தத்துடன் அந்த கார் வெடித்து சிதறியது. இதனையடுத்து மீட்பு படையினர் அங்கு சென்று பார்த்தபோது 12 பேர் உடல் சிதறி பலியாகி கிடந்தனர். படுகாயம் அடைந்த 20 பேர் மீட்கப்பட்டு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்தநிலையில், இஸ்லாமாபாத் குண்டு வெடிப்பை நிகழ்த்தியது இந்திய ஆதரவுக் குழுதான் என குற்றம்சாட்டிய பாகிஸ்தானுக்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக இந்திய வெளியுறவுத்துறை வெளியிட்ட அறிக்கையில், பாகிஸ்தானின் குற்றச்சாட்டுகள் முற்றிலும் அடிப்படையற்றது, ஆதாரமற்றது. உள்நாட்டுப் பிரச்சினைகளில் இருந்து தனது சொந்த மக்களின் கவனத்தைத் திசைதிருப்ப, இந்தியாவுக்கு எதிராக தவறான கட்டுக் கதைகளை சுமத்துவதே பாகிஸ்தானின் தந்திரம் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.