பாலிவுட் நடிகர் கோவிந்தா உடல்நலக்குறைவால் மும்பையில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றின் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவர் சுயநினைவை இழந்த நிலையில் இருப்பதாக வெளியான தகவல் ரசிகர்களிடையே அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

நேற்றிரவு, தனது வீட்டில் இருந்த போது நடிகர் கோவிந்தா திடீரென மயங்கி சரிந்து கீழே விழுந்ததாக கூறப்படுகிறது. உடனே அவரது குடும்பத்தினர் அவரை மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். மருத்துவர்கள் உடனடியாக பரிசோதனைகள் செய்து தேவையான சிகிச்சை அளித்தனர்.
கோவிந்தாவின் வழக்கறிஞரும் நெருங்கிய நண்பருமான லலித் பிந்தால் கூறுகையில், “கோவிந்தா கடந்த சில நாட்களாக சோர்வாக இருந்தார். நேற்று மயக்கம் ஏற்பட்டதால் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். தற்போது அவரின் உடல்நிலை நிலைமையைத் தாண்டி சீராக உள்ளது” என தெரிவித்துள்ளார்.
மருத்துவமனையினர் தெரிவித்ததாவது: “கோவிந்தாவின் அனைத்து முக்கிய பரிசோதனைகளும் முடிக்கப்பட்டுள்ளன. நரம்பியல் நிபுணரின் மேலதிக ஆய்வு முடிவுகள் வரைக்கும் அவர் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளார்” என கூறினர்.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்
ஐப்பசி மாசத்துல இந்த 6 ராசிக்காரர்களுக்கும் அதிர்ஷ்ட மழை
ஐப்பசியில இந்த 6 ராசிக்காரங்க யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போடாதீங்க
வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!