டி.என்.ஏ. டெஸ்ட் வேண்டும்... மாதம்பட்டி ரங்கராஜ் !
Dinamaalai November 13, 2025 11:48 AM

 

சமையல் கலைஞர் மாதம்பட்டி ரங்கராஜ் மற்றும் ஆடை வடிவமைப்பாளர் ஜாய் கிரிசில்டா இடையேயான வழக்கு தொடர்பாக இன்று சென்னை உயர் நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்றது.

வழக்கில் ஜாய் கிரிசில்டா தரப்பில், ரங்கராஜ் தனது மனைவியை விவாகரத்து செய்த பின்னரும், கிரிசில்டாவை திருமணம் செய்து ஏமாற்றிவிட்டதாக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது. மேலும், புகார் அளித்தபோதும் போலீசார் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும் வாதம் வைக்கப்பட்டது.

இதற்கு பதிலாக, ரங்கராஜ் தரப்பில், குழந்தையின் தந்தைத் தன்மையை உறுதி செய்ய டி.என்.ஏ. பரிசோதனை மேற்கொள்ள வேண்டும்; அதில் தந்தை என நிரூபிக்கப்பட்டால் குழந்தையை வாழ்நாள் முழுவதும் கவனிக்கும் பொறுப்பை ஏற்கத் தயாராக இருப்பதாக தெரிவித்தனர். சமூக வலைதளங்களில் அவதூறு வீடியோக்கள் பரப்பப்படுவதாகவும், அவற்றைத் தடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டது.

இருதரப்பின் வாதங்களையும் கேட்ட நீதிபதி, “உலை வாயை அடைக்கலாம், ஊர் வாயை அடைக்க முடியாது” எனக் குறிப்பிட்டு, எழுத்துப்பூர்வமான வாதங்களை நவம்பர் 14க்குள் தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்தார்.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

ஐப்பசி மாசத்துல இந்த 6 ராசிக்காரர்களுக்கும் அதிர்ஷ்ட மழை

ஐப்பசியில இந்த 6 ராசிக்காரங்க யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போடாதீங்க

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.