SIR பணிக்கு தகுதியான அலுவலர்கள் நியமிக்கப்படவில்லை என எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி குற்றஞ்சாட்டியுள்ளார்.

சேலத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, “திமுக மற்றும் கூட்டணி கட்சிகள் SIRஐ எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் எஸ்.ஐ.ஆருக்கு எதிராக அரசு அதிகாரிகள் செயல்படுகின்றனர். 4ஆம் வகுப்பு வரை படித்தவர்களை எஸ்.ஐ.ஆர். பணிகளில் அரசு ஈடுபடுத்துகிறது. உண்மையான வாக்காளர்கள் இடம்பெற எஸ்.ஐ.ஆர். பணி அவசியமானது. SIR குறித்து திமுக அதன் கூட்டணி கட்சிகளின் பொய்பரப்புரைகளை மக்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. SIR பணிகளிலில் தகுதியான ஆட்களை நியமனம் செய்யாமல், 4ஆம் வகுப்பு வரை படித்தவர்களை BLOஆக நியமணம் செய்வதால் SIR பணிகள் தாமதமாக நடைபெற்று வருகிறது. உடனடியாக தகுதியானவர்களை BLOவாக நியமணம் செய்ய வலியுறுத்துகிறேன். சென்னையில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணியில் சுணக்கம் இருக்கிறது. ஒரே மாதத்தில் தேர்தல் நடத்தி முடிக்கும்போது, ஏன் SIR-ஐ ஒரு மாதத்தில் நடத்த முடியாது?
பீகாரில் தேசிய ஜனநாயக கூட்டணி சாதனை வெற்றி. பீகார் தேர்தலில் தேஜ கூட்டணி மிகப்பெரிய வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளது. இதனை சரித்திர சாதனை என்று கூட சொல்லலாம். பீகாரில் SIR பணிகள் குறித்து திமுக உட்பட பல கட்சிகளும் விமர்சித்தன. எதிர்க்கட்சிகளின் பரப்புரையை மக்கள் ஏற்கவில்லை” என்றார்.