விஜய் டி.வி.யின் பிக் பாஸ் தமிழ் சீசன் 9 நிகழ்ச்சியில் இந்த வார எலிமினேஷனில் திவாகர் வெளியேறிவிட்டதாக வந்த செய்தி பரபரப்பையும் பார்வையாளர்கள் மற்றும் சக போட்டியாளர்களுக்கு நிம்மதியையும் அளித்துள்ளது.
இயக்குநர் அகத்தியனின் மகளான கனி திரு வெளியேற போவதாக முதலில் செய்திகள் கசிந்தன. ஆனால், இறுதி நேரத்தில் ரசிகர்களின் கடுமையான விமர்சனங்களுக்கு உள்ளான திவாகர் அதிரடியாக வெளியேற்றப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
‘காரக்குழம்பு கனி’ திரு வெளியேறுவார் என்ற தகவல் பொய்யானது. இன்று நடைபெற்ற ஷூட்டிங்கில், கடைசி நேரத்தில் திவாகர் எலிமினேட் செய்யப்பட்டிருப்பது, கனி திரு ரசிகர்களுக்கு நிம்மதியை கொடுத்துள்ளது.
திவாகரின் ஆணவமான பேச்சுக்கள், தற்பெருமை, தற்புகழ்ச்சி, அலப்பரைகள் மற்றும் ‘அலப்பல்கள்’ காரணமாக, அவர் மீதுச் சமூக ஊடகங்களில் கடும் அதிருப்தி நிலவியது. “பிக் பாஸ் இப்போதுதான் சரியான முடிவெடுத்தார்” என்று ரசிகர்கள் இந்த வெளியேற்றத்தை உற்சாகமாக வரவேற்றுள்ளனர்.
பிக் பாஸ் வீட்டில் திவாகர் தன்னை ஒரு வாட்டர்மெலன் ஸ்டார்’ என்று கூறிக்கொண்டதுடன், சக போட்டியாளர்களை தகுதி மற்றும் ரேஞ்ச் என்ற ஒற்றை வார்த்தைகளை கொண்டு விமர்சித்து, தனது சுய புகழ்ச்சியை நிலைநாட்ட முயன்றார்.
“இந்த உலகத்திலேயே எனக்கு மட்டும்தான் நடிக்க தெரியும். ரஜினிக்கு வயதாகிவிட்டது. விஜய் சினிமாவை விட்டு அரசியலுக்கு போய்விட்டார். அஜித் ரேஸுக்கு போய்விட்டார். தமிழ் சினிமாவை காப்பாற்ற போவது நான் தான்!” என்று அவர் பேசியது, கேலிக்குரிய மீம்ஸ்களுக்கு வழிவகுத்தது.
பார்வதியின் கருத்துகளுக்கு எப்போதும் ஆமாம் சாமி போல் இருந்த திவாகர், ரீல்ஸ் மற்றும் ஒரு சில டாஸ்க்குகளை தவிர, பெரிதாக எந்த சுவாரஸ்யத்தையும் தரவில்லை
பிக்பாஸ் வீட்டில் முதல் போட்டியாளராக வீட்டிற்குள் சென்ற திவாகர், மொத்தம் 40 நாட்கள் பிக் பாஸ் வீட்டில் இருந்துள்ளார். அவருக்கு ஒரு நாளைக்கு ரூ. 12,000 வீதம், மொத்தமாக ரூ. 5 லட்சம் சம்பளமாக கொடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
ரசிகர்களைத் தொடர்ந்து ‘டார்ச்சர்’ செய்த திவாகரின் வெளியேற்றம், இந்த சீசனில் எதிர்பார்த்து நிறைவேறிய ஒரு திருப்புமுனையாக பார்க்கப்படுகிறது.
டிஜிட்டல் ஊடக துறையில் 15 வருடங்களாக பணிபுரிகிறேன். அனைத்து பிரிவுகளிலும் கட்டுரைகள் எழுதுவேன். செய்திகள், பொழுதுபோக்கு, தொழில்நுட்பம், விளையாட்டு ஆகிய பிரிவுகள் அதிக கட்டுரைகள் எழுதியுள்ளேன்.
Author: Bala Siva