அடுத்த மாதம் (டிசம்பர்) 16-ம் தேதி அபுதாபியில் நடைபெறவுள்ள 19வது ஐபிஎல் சீசனுக்கான மினி ஏலம் குறித்து சூடு பிடித்த பரபரப்பு தொடங்கி விட்டது. இதற்கான வீரர் தக்கவைப்பு–விடுவிப்பு பட்டியலை சமர்ப்பிக்க 10 அணிகளும் தீவிர ஆலோசனையில் மூழ்கியுள்ளன.
அதற்குள், அணிகளுக்கு இடையேயான வீரர் வர்த்தக பேச்சுவார்த்தைகள் கடும் வேகத்தில் நடைபெற்று வருகின்றன.கடந்த 18வது சீசனில் தனது வரலாற்றிலேயே இல்லாத வகையில் மிக மோசமான பயணத்தை சந்தித்து, புள்ளிப்பட்டியலில் இறுதி இடத்தில் முடித்த சென்னை சூப்பர் கிங்ஸ், தற்போது அணியை முழுமையாக மறுசீரமைக்கும் பணியில் இறங்கியுள்ளது.

இதன் ஒரு பகுதியாக, டெவோன் கான்வே, ரச்சின் ரவீந்திரன், ராகுல் திரிபாதி, தீபக் ஹூடா, விஜய் சங்கர், ஜேமி ஓவர்டன் உள்ளிட்ட ஆறு வீரர்களை விடுவிக்க சிஎஸ்கே முடிவு செய்துள்ளது.இதே நேரத்தில், முக்கிய ஸ்டாரை அணியில் சேர்க்கும் முயற்சியில் ஈடுபட்ட சிஎஸ்கே, ராஜஸ்தான் ராயல்ஸ் அணியுடன் சஞ்சு சாம்சனை வாங்க பேச்சுவார்த்தை நடத்தியது.
பதிலுக்கு, ராஜஸ்தான் அணி ரவீந்திர ஜடேஜா மற்றும் சாம் கர்ரன் இருவரையும் கேட்டு அதிரடி கோரிக்கை வைத்தது.அனைத்து ஜவுளிக் கதவுகளும் திறந்து, பெரும் பரிமாற்ற ஒப்பந்தம் இறுதி செய்யப்பட்டு, ஜடேஜா–கர்ரன் இருவரையும் ராஜஸ்தானுக்கு ஒப்படைத்து, சிஎஸ்கே ரூ.18 கோடி மதிப்பில் சஞ்சு சாம்சனை அதிகாரப்பூர்வமாக ஒப்பந்தம் செய்து விட்டது.
ராஜஸ்தான் அணிக்காக 11 சீசன்கள் விளையாடிய சஞ்சு சாம்சன் இதுவரை 4,027 ரன்கள் குவித்து, அணியின் backbone-ஆக திகழ்ந்ததை நினைத்தால், இந்த பரிமாற்றம் சீசன் தொடங்குவதற்குள் மிக பெரிய அதிர்ச்சி டீல் என ரசிகர்கள் கருதுகின்றனர்.