243 தொகுதிகள் கொண்ட பீகார் சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் நேற்று (நவம்பர் 14) அறிவிக்கப்பட்டன. இதில், முதல்வர் நிதிஷ் குமாரின் தேசிய ஜனநாயகக் கூட்டணி (NDA) 202 தொகுதிகளில் வெற்றி பெற்று அமோக ஆட்சியைத் தக்கவைத்தது.
தேஜஸ்வி யாதவின் RJD ஒட்டுமொத்தமாக 23% வாக்குகளைப் பெற்று, தனிப்பெரும் கட்சியாக அதிக வாக்குச் சதவீதத்தைப் பெற்றிருந்தபோதும், அதன் வெற்றி பெற்ற இடங்கள் 2020 தேர்தலில் 75 ஆக இருந்த நிலையில், இந்தத் தேர்தலில் 25 இடங்களாகச் சுருங்கி உள்ளது.
மகாகத்பந்தன் கூட்டணி ஒட்டுமொத்தமாக 35 இடங்களையே கைப்பற்றியது.
தனித்துப் போட்டியிட்ட ஓவைசியின் ஏஐஎம்ஐஎம் கட்சி 5 இடங்களில் வெற்றி பெற்றது.
பாஜக (20.08%) மற்றும் ஜேடியு (19.25%) ஆகியவை இணைந்து அதிக இடங்களை வென்று ஆட்சியைப் பிடித்தன.