பீகார் சட்டமன்றத் தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணி (NDA) 202 தொகுதிகளில் அபார வெற்றி பெற்ற நிலையில், அடுத்த முதலமைச்சர் யார் என்பதை முடிவு செய்வதற்காகப் பாஜகவின் முக்கியத் தலைவர்கள் டெல்லியில் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளனர்.
மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுடன் பாஜக தேசியத் தலைவர் ஜே.பி. நட்டா அவர்கள், பீகார் மாநில முதலமைச்சர் தேர்வு குறித்து ஆலோசனை நடத்தி வருகிறார். இந்தத் தேர்தலில் பாஜக 89 தொகுதிகளில் வெற்றி பெற்று, இந்தக் கூட்டணியில் தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது.
தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இடம்பெற்றுள்ள நிதிஷ்குமாரின் ஐக்கிய ஜனதா தளம் (JDU) கட்சி 85 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ள நிலையில், அக்கட்சியின் தலைவர்கள் அடுத்த முதலமைச்சராக நிதீஷ்குமார்தான் தொடர்வார் என நம்பிக்கை தெரிவித்து வருகின்றனர்.
இருப்பினும், பாஜக அதிகத் தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளதால், முதலமைச்சர் பதவியைத் தக்கவைப்பதில் நிதீஷ்குமாருக்கு நெருக்கடி ஏற்படலாம் என்று கருதப்படுகிறது. பாஜகவின் முடிவைப் பொறுத்தே, பீகாரின் அடுத்த முதலமைச்சர் குறித்த தெளிவு ஏற்படும்.