”2001-ல் 50 லட்ச ரூபாய் கடனில் இருந்த திமுக அமைச்சர், இன்று ரூ.500 கோடி சொத்து சேர்த்துள்ளார்”- நயினார் நாகேந்திரன்
Top Tamil News November 16, 2025 04:48 PM

எந்த கூட்டணி வந்தாலும் வெற்றி பெற போவது தேசிய ஜனநாயகக் கூட்டணி தான் என கோவில்பட்டியில் பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் உரையாற்றினார்.

தமிழகம் தலை நிமிர தமிழனின் பயணம் என்ற பெயரில் பாஜக தமிழக தலைவர் நயினார் நாகேந்திரன் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு பிரச்சாரம் செய்து வருகிறார் அந்த வகையில் தூத்துக்குடி மாவட்டம்  கோவில்பட்டி பழைய பேருந்து நிலையம் முன்பு பிரச்சாரம் மேற்கொண்டார். நயினார் நாகேந்திரனுடன் அதிமுக முன்னாள் அமைச்சரும் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினருமான கடம்பூர் ராஜூ  கலந்து கொண்டார். இதனை தொடர்ந்து பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் பேசுகையில், “தமிழகத்தை மீட்போம் மக்களை காப்போம் என்று கூறி திமுக ஆட்சி முடிவுக்கு எடப்பாடி பழனிச்சாமி முன்னுரை எழுதி இருக்கிறார். நாங்கள் திமுக ஆட்சிக்கு முடிவுரை எழுவோம், கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜு பல்வேறு பணிகளை கோவில்பட்டி தொகுதிக்கு  செய்துள்ளார் 3 மாதத்தில் திமுக ஆட்சியை முடித்துக் காட்ட வேண்டும் விதவைகள் அதிகமாக உள்ளதாக பேசிய கனிமொழி எம்பி இன்று வாய் திறக்கவில்லை.  திமுக ஆட்சியில் டாஸ்மாக் கடைகள் படிப்படியாக குறைக்கப்படும் என்றார்கள் ஆனால் இன்றைக்கு அதிகரித்து தான் காணப்படுகிறது . டாஸ்மாக் மூலம் 50 ஆயிரம் கோடி வருமானம் வருகிறது தீபாவளிக்கு 250 கோடி ரூபாய் விற்பனையாகி உள்ளது. மறு பக்கம் கடனில் இருந்த அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், 500 கோடி ரூபாய் சொத்து சேர்த்துள்ளார் அனிதா ராதாகிருஷ்ணன். அவர் மீது பல்வேறு வழக்குகள் உள்ளன. விவசாயிகளுக்கு திமுக அரசு எதுவும் செய்யவில்லை. கோவில்பட்டி தொகுதிக்கு திமுக கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றவில்லை. அதிமுக பாஜகவிற்கு அடிமையாக இருப்பதாக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் கூறுகிறார்.திமுக அமைச்சர்கள் தான் அடிமைகளாக இருக்கிறார். உதயநிதி ஸ்டாலின் அடுத்த முதல்வராக வரமாட்டார் என்று திமுக அமைச்சர்கள் கூற முடியுமா ? 

கச்சத்தீவினை தாரை வார்த்து போது ஜன சங்கம் போராடியது. வாஜ்பாய் நாடாளுமன்றத்தில் பேசி கச்சதீவு கொடுப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்தார். பாஜக தமிழர்களுக்கு எதிரான கட்சி இல்லை .பிரதமர் நரேந்திர மோடி எங்கு சென்றாலும் தமிழ் மொழியின் பெருமைகளை பேசி வருகிறார் பாஜக ஆட்சியில் தான் தங்க நாற்கர சாலை அமைக்கப்பட்டது. 450 கோடி ரூபாயில் தூத்துக்குடி விமான நிலையம் விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது. தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பீகாரில் பிரச்சாரம் மேற்கொண்டதால் பாஜக 200க்கும் மேற்பட்ட தொகுதிகளில்  வெற்றி பெற்றது. தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி 200 தொகுதியில் வெற்றி பெறும் தமிழகத்தில் எங்கும் போதை பொருள்கள் கிடைக்கிறது. பெண்கள் தெருவில் நடக்க முடியவில்லை. விவசாயிகள் இறந்தால் ரூ 2லட்சம் கள்ளச்சாராயம் குடித்து இறந்தால் ரூ.10 லட்சம் வழங்கும் அரசு திமுக அரசு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினை முதல்வராக்க திமுக முயற்சி செய்து வருகிறது. தமிழக வெற்றிக் கழகத்துடன் கூட்டணி அமைக்க  உள்ளது. காங்கிரஸ் எந்த கூட்டணி வந்தாலும் வெற்றி பெற போவது தேசிய ஜனநாயகக் கூட்டணி தான்” என்றார்.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.