ரஜினிகாந்த் - சுந்தர்.சி இணைந்து உருவாக இருந்த புதிய படத்திலிருந்து இயக்குநர் சுந்தர்.சி விலகியதைச் சுற்றி பரவி வரும் ஊகங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், கவிஞர் வைரமுத்து தனது எக்ஸ் தள பதிவில் விளக்கம் அளித்துள்ளார். அவர், இந்த விலகல் ஒரு திடீர் விபத்தல்ல, திரைப்படத்தின் பயணத்தில் உருவாகும் இயல்பான திருப்பம் மட்டுமே என்றும், இதிலிருந்து யாரும் தேவையற்ற சந்தோஷம் அடைய வேண்டாம் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
இது குறித்து வைரமுத்து தனது பதிவில், தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திரங்களான ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசன் இருவரையும் பாராட்டியும் நன்றியுடனும் நினைவு கூர்ந்துள்ளார். மேலும், திரைப்படத் துறையில் இயக்குநர் மாற்றம் ஒரு அரிய விஷயம் அல்ல என்பதை எடுத்துக்காட்டும் விதமாக, ‘அண்ணாமலை’ படத்தின் தயாரிப்பு காலத்தை நினைவுபடுத்தியுள்ளார். அப்போது இயக்குநர் வசந்த் விலகிய போது, கே. பாலசந்தரின் சீடரான சுரேஷ் கிருஷ்ணா பொறுப்பேற்றார். அதன் பின்னர் ‘அண்ணாமலை’ ரஜினியின் வாழ்க்கையில் மறக்க முடியாத வெற்றிப்படமாக திகழ்ந்தது என்பதையும் வைரமுத்து முன்வைத்துள்ளார்.
“இந்த மாற்றமும் அப்படிப்பட்ட வரலாற்றுச் சிறப்பை மீண்டும் உருவாக்க வாய்ப்புள்ளது. திரைப்பயணத்தில் ஏற்படும் மாற்றங்களை சமநிலை உணர்வோடு அணுகினால், பலருக்கும் அது வெற்றியின் வாசலாக மாறும்,” என பதிவில் குறிப்பிட்டுள்ள அவர், சமூக வலைத்தளங்களில் பரப்பப்படும் ஊகங்களுக்கும், தேவையற்ற விவாதங்களுக்கும் இடமளிக்க வேண்டாம் என்று ரசிகர்களுக்கு அழைப்பு விடுத்தார்.
சுந்தர்.சி விலகிய பிந்தைய இயக்குநர் யார் என்கிற விவரங்கள் குறித்து தயாரிப்பு தரப்பில் இருந்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வெளியாகாத நிலையில், இந்த பதிவு ரசிகர்கள் மத்தியில் புதிய ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்
ஐப்பசி மாசத்துல இந்த 6 ராசிக்காரர்களுக்கும் அதிர்ஷ்ட மழை
ஐப்பசியில இந்த 6 ராசிக்காரங்க யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போடாதீங்க
வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!