கொடைக்கானல் பயணத்திற்காக சென்னையில் இருந்து புறப்பட்ட மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன், இன்று மதுரை விமான நிலையத்தை வந்தடைந்தார்.அங்கு ஊடகங்களை சந்தித்த அவர், அரசியல் சூழலைக் குறித்த கேள்விகளுக்கு பதிலளித்தார்.
கமல்ஹாசன் தெரிவித்ததாவது,"பீகார் தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி மீண்டும் ஆட்சியை பிடித்துள்ளது. அந்த முடிவை உணர்வு மட்டத்தில் அல்ல, விமர்சன நுண்ணறிவுடன் மதிக்க வேண்டும். தமிழகம் எப்போதும் போலவே எச்சரிக்கையுடன், விழிப்புணர்வுடன் முன்னேற வேண்டும்.மேகதாது அணை பிரச்சனை என்பது புதிய சர்ச்சை அல்ல… நான் சிறுவனாக இருந்த தருணம் முதல் தொடர்ந்தே வரும் விவகம்.

காலம் மாறலாம், ஆனால் சில அத்தியாயங்கள் அரசியலில் முடிவதில்லை.எனது தாடி நிறம் மட்டும் தான் மாறியுள்ளது, ஆனால் எனது நிலையோ நிலைப்பாடோ மாறவில்லை.
இப்போது புதிதாக உருவாகும் சில அரசியல் சக்திகள், தங்களை உயர்த்திக்காட்டுவதற்காக தி.மு.க.வையே எதிரியாக முன்னிறுத்துகிறார்கள். யார் வந்தாலும் இலக்கு உயரமாக இருக்க வேண்டும் என்பதால் அப்படிச் சொல்வார்கள், அது அரசியலின் பழைய நடைமுறை.
நடிக்க வேண்டும் என்றால் ‘சிறந்த நடிகராகவே’ வர வேண்டும் என்பதே மக்கள் எதிர்பார்ப்பு. பெற்றோர் தங்கள் குழந்தையை ‘மகராசன்’ என்று அழைப்பது போல, உயர்வை நோக்கி கனவு காண்பது எல்லோருக்கும் உள்ள இயல்பான ஆசைதான்” என கமல்ஹாசன் கூறினார்.