SIR-க்கு எதிராக தமிழ்நாட்டில் உள்ள 38 மாவட்டங்களிலும் தவெகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடவுள்ளனர்.
தமிழ்நாட்டில் கடந்த நான்காம் தேதி முதல் வாக்காளர்கள் சிறப்புத் தீவிர பணிகளை தேர்தல் ஆணையம் மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் தான் இந்த பணிக்கு தமிழ்நாட்டில் உள்ள பெரும்பாலான கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். அதன் ஒரு பகுதியாக தமிழக வெற்றிக்கழகமும் இந்த பணிக்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று மாநிலம் முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் SIR-க்கு எதிராக தமிழ்நாட்டில் உள்ள 38 மாவட்டங்களிலும் தவெகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடவுள்ளனர். சென்னை சிவானந்தா சாலையில் புஸ்ஸி ஆனந்த், ஆதவ் அர்ஜூனா தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் செய்தனர். அப்போது தேர்தல் ஆணையம் மேற்கொண்டுவரும் பணிகளை கைவிட வேண்டும் என்றும் தவெகவினர் முழக்கமிட்டனர்.