இளைஞரின் பிறப்புறப்பை கடித்து குதறிய வளர்ப்பு நாய்! ஆம்பூரில் பரபரப்பு
Top Tamil News November 16, 2025 04:48 PM

ஆம்பூர் அருகே தனியார் உணவகத்தில் பணியாற்றும் வடமாநில  இளைஞரின் பிறப்புறப்பை கடித்து குதறிய வளர்ப்பு நாயின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த செங்கிலிகுப்பம் பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் உணவகத்தில், மேற்குவங்க மாநிலத்தை சேர்ந்த ஷெரிப் என்பவர்  சமையல் மாஸ்டராக  பணியாற்றி வருகிறார். இந்த நிலையில் இவர் அதிகாலை கழிவறை செல்வதற்காக வந்த போது, உணவகத்தில் மின்சார காரிற்கு சார்ஜ் போட வந்த நபரின் இரண்டு வளர்ப்பு நாய் ஷெரிப்பை பார்த்து ஆக்ரோஷமாக குரைத்துள்ளது. பின்னர் ஒரு நாய் ஓடிவந்து அங்கு ஓரம் நடந்து சென்றுக்கொண்டிருந்த ஷெரிபின் பிறப்புறப்பில் கடித்துள்ளது. இதில் அவர் படுகாயம் ஏற்பட்டு பிறப்புறப்பில் அதிக அளவு ரத்தம் வெளியேறியுள்ளது. உடனடியாக அவரை சக பணியாளர்கள் மீட்டு சிகிச்சைக்காக ஆம்பூர் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச்சென்று, பின்னர் மேல்சிகிச்சையிற்காக வேலூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.


மேலும் நாயின் உரிமையாளர் மீது ஷெரிப் ஆம்பூர் கிராமிய காவல்நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் ஆம்பூர் கிராமிய காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்க்கொண்டு வருகின்றனர்.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.