வாக்காளர் பட்டியலை விட வாக்காளர்கள் எண்ணிக்கை அதிகம் இருந்தது ஏன்? தேர்தல் ஆணையம் விளக்கம்..!
WEBDUNIA TAMIL November 16, 2025 07:48 PM

பீகாரில் வாக்காளர் பட்டியலில் வெளியிடப்பட்டிருந்த வாக்காளர்களின் எண்ணிக்கையை விட தேர்தலுக்கு பிறகு வாக்களித்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்தது ஏன் என்ற காங்கிரஸ் கட்சியின் கேள்விக்கு தேர்தல் ஆணையம் விளக்கம் அளித்துள்ளது.

தேர்தல் விதிமுறைகளின்படி, வேட்பு மனு தாக்கலுக்கு 10 நாட்களுக்கு முன்பு வரை புதிய வாக்காளர்களை பட்டியலில் சேர்க்க முடியும் என்று தேர்தல் ஆணையம் விளக்கம் அளித்துள்ளது.

கடந்த செப்டம்பர் மாதம் பீகாரில் வெளியான வாக்காளர் பட்டியலில் 7.42 கோடி வாக்காளர் எண்ணிக்கை இருந்தது. ஆனால், தேர்தலுக்கு பத்து நாட்களுக்கு முன்பு வரை புதிய வாக்காளர்கள் பட்டியலில் சேர்க்கப்பட்டதால், அதன்பிறகு 745 கோடியாக வாக்காளர் எண்ணிக்கை மாறியது என்று தேர்தல் ஆணையம் விளக்கம் அளித்துள்ளது.

இந்த விளக்கத்தை காங்கிரஸ் கட்சி ஏற்றுக் கொண்டதா இல்லையா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Edited by Siva

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.