ரஜினிகாந்த்–கமல்ஹாசன் கூட்டணியில் உருவாகும் தலைவர் 173 படம் அறிவிக்கப்பட்டது முதல் ரசிகர்களிடம் பெரிய எதிர்பார்ப்பு நிலவியது. கமலின் ராஜ்கமல் பிலிம்ஸ் தயாரிப்பில், சுந்தர் சி இயக்குவார் என்றும், 2027 பொங்கலுக்கு படம் வெளியாகும் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது.
அறிவிப்புக்கு ஒரு வாரத்திற்குள் சுந்தர் சி திடீரென படத்தில் இருந்து விலகுவதாக அறிவித்தது திரையுலகை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. காரணத்தை அவர் தெரிவிக்காததால் பல வதந்திகளும் எழுந்தன.
சுந்தர் சி சொன்ன கதையில் ரஜினிகாந்த் பல மாற்றங்களை கேட்டதாகவும், அதில் இயக்குநர் சம்மதிக்காததால் அவர் விலகிவிட்டதாகவும் தகவல்கள் வெளியானது.இதுகுறித்து ரசிகர்களிடையே “ரஜினி–கமல்–சுந்தர் சி இடையே ஏதாவது பிரச்சனையா?” என்ற கேள்வியும் எழுந்தது.
இன்று டெல்லியில் இருந்து சென்னை திரும்பிய கமல்ஹாசனிடம் விமான நிலையத்தில் செய்தியாளர்கள் தலைவர் 173 குறித்து கேள்வி எழுப்பினர்.
அதற்கு கமல் கூறியதாவது:“சுந்தர் சி விலகியது குறித்து அவர் சொந்த அறிக்கையில் விளக்கமளித்துவிட்டார்.”“நான் தயாரிப்பாளர். எனது நட்சத்திரத்திற்கு (ரஜினி) பிடித்த கதையை எடுப்பதுதான் ஆரோக்கியமானது.”“அவருக்குப் பிடிக்கும் கதை வரும்வரை நாங்கள் கேட்டு கொண்டே இருப்போம்.”கதை நன்றாக இருந்தால் புதிய இயக்குநருக்கும் வாய்ப்பு உண்டு.”“நானும் ரஜினியும் நடிக்கும் படத்திற்கான சரியான கதையைத் தேடி கொண்டிருக்கிறோம்.”
கமலின் சொல்லில் இருந்து இரண்டு விஷயங்கள் தெளிவாகிறது:சுந்தர் சி சொன்ன கதை ரஜினி விரும்பாததால் தான் அவர் விலகினார்.தலைவர் 173 படம் கைவிடப்படவில்லை, புதிய இயக்குநர் உடன் தொடர உள்ளது.
ரஜினி–கமல் கூட்டணி உருவாக்கும் இந்த படத்தின் இயக்குநர் யார் என்பது தற்போது ரசிகர்களின் மிகப் பெரிய எதிர்பார்ப்பாக மாறியுள்ளது.