2021 சட்டமன்ற தேர்தலில், தமிழ்நாட்டிலேயே அதிக வாக்குகள் பெற்று அமைச்சரானார் ஐ. பெரியசாமி. திண்டுக்கல் ஆத்தூர் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினரான தமிழக ஊரக வளர்ச்சி துறை அமைச்சராக இருக்கிறார்
கடந்த ஆகஸ்ட் மாதம் ஐ. பெரியசாமி சென்னை மற்றும் திண்டுக்கல் வீட்டிலும், அவரது மகன் பழநி எம்.எல்.ஏ செந்தில்குமார் வீட்டிலும் அமலாக்கத்துறை சோதனை நடத்தியது குறிப்பிடத்தக்கது.
SIR - சிறப்பு தீவிர திருத்தம் "S.I.R. அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் பங்கேற்காதது ஏன்" - தவெக தலைவர் விஜய் விளக்கம்
இந்நிலையில் நேற்று திண்டுக்கல் தி.மு.க. கட்சி நிகழ்ச்சி ஒன்றில் வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிர திருத்தப் பணிகள் குறித்துப் பேசியிருக்கும் அமைச்சர் ஐ.பெரியசாமி, "பாஜக தி.மு.க. வாக்குகள் அதிகமாக இருக்கும் பகுதிகளைக் குறிவைத்து, 'SIR' மூலம் தி.மு.க. விற்கு விழும் வாக்குகளை நீக்கும் சதிச்செயலை செய்யத் திட்டமிட்டிருக்கிறது.
ஒவ்வொரு பூத்திற்கும் 10 வாக்குகளை நீக்கினால்கூட தொகுதிக்கு 500 வாக்குகள் காலியாகிவிடும். ஒரே ஒரு வாக்கு ஆட்சியையே மாற்றிவிடும். அப்போ தொகுதிக்கு 500 வாக்குகள் காலியானால் என்ன நடக்கும் என்று யோசித்துப் பாருங்கள். திமுகவினர் கவனமாக செயல்பட்டு நம்முடைய வாக்காளர்களை இழந்துவிடாமல் எல்லோரையும் வாக்காளர் பட்டியலில் இடம்பெற வைக்க வேண்டும்.
அமைச்சர் ஐ.பெரியசாமி Bihar SIR: "நெருப்புடன் விளையாடாதீர்கள்; 'Bihar SIR'-யை கைவிடுங்கள்"- முதல்வர் ஸ்டாலின் காட்டம்
இப்படி அவசர அவசரமாக இந்த எஸ்.ஐ.ஆர் எடுத்து 2026 சட்டமன்ற தேர்தலில் சதி செய்யலாம் என்று பார்க்கிறார்கள். நாங்கள் எஸ்.ஐ.ஆர் வேண்டாம் என்று சொல்லவில்லை. அவசர அவசரமாக நடக்கும் இந்த எஸ்.ஐ.ஆர் வேண்டாம் என்றுதான் சொல்கிறோம். தேர்தல் முடிந்தபிறகு ஒரு ஆண்டுகூட பொறுமையாக இந்த எஸ்.ஐ.ஆரை நடத்துங்கள். ஆனால், ஏன் இப்படி அவசர அவசரமாக நடத்துகிறீர்கள் என்பதுதான் எங்களின் எதிர்ப்புக் காரணம்" என்று பேசியிருக்கிறார்.