பொதுவாக பலர் பல முறையில் பல விதமாக முயற்சித்து பார்த்து தனது உடல் எடையை குறைத்துக்கொள்ள நினைத்து இருப்பார்கள்.ஆனால் அந்த எல்லாமே தோல்வியில் முடிந்திருக்கும்
இப்படி முயற்சித்த முறைகளுக்கு எல்லாம் முற்று புள்ளி வைக்கும் முகமாக இருப்பது தான் இந்த கொள்ளு சட்னி. இதை ஒரு முறை செய்து சாப்பிட்டு பாருங்க போதும்.உடல் எடை குறைய வாய்ப்புள்ளது
இதை செய்வது எப்படி மற்றும் இதனால் உடலில் ஏற்படக்கூடய நன்மைகள் பற்றியும் இந்த பதிவின் மூலம் தெரிந்துக்கொண்டு உடல் எடை குறைத்து ஆரோக்கியமாய் வாழ்வோம்
1.நம் உடலில் உள்ள கொழுப்பை குறைக்க ,முதலில் ஒரு பாத்திரத்தில் கொள்ளு சேர்த்து வறுத்தெடுத்துக்கொள்ள வேண்டும்.
2.பின் கொள்ளு வறுத்த பாத்திரத்தில் எண்ணெய், உளுத்தம் பருப்பு மற்றும் கடலை பருப்பு சேர்த்து பொண்ணிறமாக வறுத்தெடுத்துக்கொள்ள வேண்டும்.
3.அந்த கலவையுடன் பூண்டு, வெங்காயம் மற்றும் காய்ந்த மிளகாய் சேர்த்து வதக்கி எடுக்க வேண்டும்.
4.பின்னர் அந்த வறுத்த கொள்ளுவில் புளி,தேங்காய் துருவல், பெருங்காய தூள் மற்றும் உப்பு சேர்த்து பிரட்டி எடுத்துக்கொள்ள வேண்டும்.
5.பின்னர் அந்த கலவை வதக்கி வந்ததும் மற்றும் வறுத்தெடுத்ததையும் மிக்ஸியில் சேர்த்து அரைத்து எடுத்துக்கொள்ள வேண்டும்.
6.இறுதியாக எண்ணெய், கடுகு மற்றும் கறிவேப்பிலை சேர்த்து தாளித்து, எடுத்து கொள்ள வேண்டும்
7.தாளித்த பொருட்களை சட்னியில் கலந்து எடுத்தால் சுவையான ஆரோக்கியமான கொள்ளு சட்னி தயார்!
8.இந்த கொள்ளு சட்னியை இட்லி தோசைக்கு தொட்டும் சாப்பிட்டால் சுவையாக இருக்கும் .