தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலின் தனது எக்ஸ் தளப் பதிவில், பீகார் அரசியலில் உருவான புதிய சூழ்நிலையைப் பற்றிய தனது பார்வையைத் தெளிவாக வெளிப்படுத்தியுள்ளார்.
அதில் அவர் தெரிவித்ததாவது,"பீகார் முதல்வர் நிதிஷ்குமார் அவர்கள் பெற்றுள்ள மிகப்பெரிய வெற்றி, அவரது நீண்டகால அரசியல் அனுபவத்திற்கும் மக்களிடையுள்ள நம்பிக்கைக்கும் வெளிப்படும் சான்றாகும்.

அவருக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள். அதேபோல் தொடர்ந்து அயராது பிரசாரம் செய்து இளைஞர்களிடம் மிகுந்த வரவேற்பைப் பெற்ற தேஜஷ்வி யாதவுக்கும் சிறப்பு வாழ்த்துகள்".
அவர் தொடர்ந்து,“இந்த தேர்தல் முடிவுகள், நலன்புரி கொள்கைகளின் வெற்றி, வலுவான சமூக–சித்தாந்த கூட்டணிகள், தெளிவான அரசியல் செய்தி மற்றும் கடைசி வாக்கு வரை அசைக்க முடியாத திட்டமிடல் ஆகியவற்றின் பிரதிபலிப்பாக இருக்கின்றன.
இந்தியா கூட்டணியில் உள்ள தலைவர்கள் இச்செய்தியைப் புரிந்து, எதிர்கால சவால்களை நேருக்கு நேர் சமாளிக்கும் ஞானமும் அரசியல் அனுபவமும் பெற்றவர்களே” என குறிப்பிட்டார்.
மேலும் அவர்,“இந்தத் தேர்தல், இந்திய தேர்தல் ஆணையத்தின் மதிப்பு எவ்வளவு வீழ்ச்சியடைந்துள்ளது என்பதை வெளிப்படையாக காட்டுகிறது. இன்று அந்த அமைப்பு தனது வரலாற்றிலேயே மிகவும் தாழ்ந்த கட்டத்தை சந்தித்து வருகிறது.
வெற்றி பெறாதவர்களுக்குப் கூட நம்பிக்கையை இழக்காத வகையில் செயல்படுவதுதான் ஒரு சுயாதீன தேர்தல் ஆணையத்தின் அடிப்படை பண்பு” எனக் கடும் அதிருப்தியையும் பதிவு செய்துள்ளார்.