கேரளாவின் எர்ணாகுளம் மாவட்டம், திருப்பூணித்துறா அருகிலுள்ள ஏரூர் பகுதியில் வாடகை வீட்டில் வசித்துப் வந்தவர் தமிழ்நாட்டைச் சேர்ந்த உபேந்திரன் (42). இவர் வளர்த்து வந்த நாய், இரண்டு வாரங்களுக்கு முன்பு திடீரென அவரை கடித்து கடுமையாகக் காயப்படுத்தியது.காயத்திற்குப் பிறகு அவர் உடனே அரசு மருத்துவமனைக்கு சென்று ரேபிஸ் தடுப்பூசி பெற்றார்.

ஆனால் ஒரு வாரத்துக்குள் அவரது உடல்நிலை மோசமடைந்து, கடும் அதிர்ச்சியூட்டும் ரேபிஸ் அறிகுறிகள் வெளிப்பட்டன. இதையடுத்து அவர் தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.அதே நேரத்தில், வளர்ப்பு நாய்க்கும் வெறி பிடித்த அறிகுறிகள் தென்படத் தொடங்கியதால் அக்கம் பக்கத்தினர் அஞ்சிப் போய், அந்த நாயை அடித்து கொன்றனர்.
உபேந்திரனின் நிலை மேலும் கவலைக்கிடமானதால், அவர் எர்ணாகுளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு மாற்றி தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால் மருத்துவர் முயற்சிகள் பலனளிக்காமல், அவர் உயிரிழந்தார்.இந்த துயர சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.