கத்தார்: ஆசிய கோப்பை ரைசிங் ஸ்டார்ஸ் (Asian Cup Rising Stars) ஹாக்கி தொடரில் நடைபெற்ற லீக் ஆட்டத்தில், இந்தியா 'ஏ' அணியை பாகிஸ்தான் 'ஏ' அணி (பாகிஸ்தான் ஷாகீன்ஸ்) வீழ்த்தி முதல் அணியாக அரையிறுதிக்கு முன்னேறியது.
கத்தாரில் நடைபெற்ற இந்தப் போட்டியில், டாஸ் வென்ற பாகிஸ்தான் 'ஏ' அணி பந்துவீச்சைத் தேர்வு செய்தது. முதலில் பேட்டிங் செய்த இந்திய 'ஏ' அணி, 19 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 136 ரன்கள் மட்டுமே எடுத்தது. இந்திய அணியில் அதிகபட்சமாக வைபவ் சூர்யவன்ஷி 45 ரன்கள் எடுத்தார். பாகிஸ்தான் பந்துவீச்சில் ஷாகித் அசிஸ் 3 விக்கெட்டுகளையும், மாஜ் சதாகட் மற்றும் ஷான் மசூத் தலா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தி அசத்தினர்.
தொடர்ந்து ஆடிய பாகிஸ்தான் ஷாகீன்ஸ் அணி, அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி 13.2 ஓவர்களில் வெறும் 2 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 137 ரன்களை எடுத்து அபார வெற்றி பெற்றது. பாகிஸ்தான் அணியில் மாஜ் சதாகட் ஆட்டமிழக்காமல் 79 ரன்கள் குவித்து அணியின் வெற்றிக்கு வித்திட்டார். பந்துவீச்சு மற்றும் பேட்டிங் என இரண்டிலும் சிறந்து விளங்கிய மாஜ் சதாகட், ஆட்ட நாயகனாகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
இந்த வெற்றியின் மூலம், பாகிஸ்தான் 'ஏ' அணி முதல் அணியாக அரையிறுதிக்குத் தகுதி பெற்றது. மேலும், இரு நாட்டு அணியினரும் டாஸ் சுண்டும்போது கைகுலுக்காமல் சென்றது குறிப்பிடத்தக்கது.