இந்தோனேசியாவின் மத்திய ஜாவா மாகாணத்தை தாக்கிய கனமழை பெரும் பேரழிவை ஏற்படுத்தியுள்ளது. இரவோடு இரவாக பெய்த மழையில், பல்வேறு இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டு கிராமங்கள் முழுவதும் மண்ணில் புதைந்து கிடக்கும் சூழல் ஏற்பட்டது. இதில், வீடுகள் பல கணநேரத்தில் சிதறி, மக்கள் உயிருடன் புதையுண்ட நிலையில் மீட்பு படையினர் துடிப்புடன் பணியாற்றி வருகின்றனர்.

மத்திய ஜாவாவின் சிலாகேப் நகரின் சீபியுனிங் கிராமம் மிக மோசமான தாக்கத்தை சந்தித்துள்ளது. 10 முதல் 25 அடி ஆழமுள்ள மண் அடுக்கு கீழ் மக்கள் புதைந்ததால், அவர்களை தேடும் பணி கடும் சிரமத்துக்கு உள்ளாகியுள்ளது. இந்த பகுதியில் மட்டும் 16 பேர் உயிரிழந்த நிலையில், 7 பேர் இன்னும் காணாமல் போயுள்ளனர் என்று மீட்பு குழுத் தலைவர் அப்துல்லா தெரிவித்தார்.
அதேபோல் பஞ்சார்நிகரா பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவில் 2 பேர் பலியாகி, 27 பேர் காணாமல் போயுள்ளனர். மொத்தம் 30 வீடுகள் மற்றும் பெருமளவு விவசாய நிலங்கள் சேதமடைந்துள்ளன. இடைவிடாது பெய்து கொண்டிருக்கும் கனமழையை மீறியும், தேடுதல் மற்றும் மீட்பு பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!