வைகோ மீது மல்லை சத்யா குற்றச்சாட்டு… கடும் பதிலடி!
Dinamaalai November 18, 2025 10:48 PM

 

 

மதிமுக பொதுச்செயலாளர் வைகோவுக்கு செங்கல்பட்டு மாவட்டத்தில் 250 கோடி ரூபாய் சொத்து இருப்பதாக மல்லை சத்யா கூறியதால் அரசியல் வட்டாரத்தில் சர்ச்சை வெடித்துள்ளது. இந்த குற்றச்சாட்டு ஆதாரமற்றது என வைகோ கடுமையாக மறுத்ததுடன், “ஆலகால விஷத்தை கக்கும் நச்சுப்பாம்பு” என்று மல்லை சத்யாவை நேரடியாக தாக்கினார். “என் நேர்மையை உலகமே அறிவது… என் அரசியல் விரோதிகள்கூட இப்படிப் பேச துணியாத குற்றச்சாட்டு இது” என்றார்.

வைகோ மேலும் தெளிவுபடுத்தியதில், “நான் செல்வச் செழிப்பான குடும்பத்தில் பிறந்தவன். என் பாட்டனார் சேர்த்த கோடிக்கணக்கான சொத்துகள் இருந்தன. ஆனால் அரசியலுக்காக அந்தச் சொத்துகளை விற்றுவிட்டேன்” என்று கூறினார். பொதுச்சேவைக்காக தனிப்பட்ட செல்வம் முழுவதையும் துறந்ததாகவும், “இந்தக் கரங்கள் கறைபடியாத கரங்கள்” என்றும் வைகோ வலியுறுத்தியுள்ளார். மல்லை சத்யாவின் குற்றச்சாட்டை “ஜமுக்காளத்தில் வடிகட்டிய பொய்” எனவும் அவர் சாடினார்.

இதுகுறித்து வைகோ தனது சமூக வலைதளத்திலும் அறிக்கை வெளியிட்டு, “என்னை அறிந்தவர்கள் இத்தகைய பொய்களை நம்பமாட்டார்கள்” என தெரிவித்தார். இந்த பதிலடி மதிமுக தொண்டர்களிடையே ஆதரவை அதிகரித்துள்ளது. அதேசமயம், மல்லை சத்யா–வைகோ மோதல் மீண்டும் வெளிப்படையாகியுள்ளதால் கட்சியின் உள் அரசியல் குறித்து புதிய கேள்விகள் எழுந்துள்ளன.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.