சர்வதேச ஹாக்கி சம்மேளனம், ஹாக்கி இந்தியா மற்றும் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் இணைந்து நடத்தும் ஜூனியர் ஆடவர் ஹாக்கி உலகக் கோப்பை நவம்பர் 28 முதல் டிசம்பர் 10 வரை சென்னை, மதுரை நகரங்களில் நடைபெற உள்ளது. இருமுறை சாம்பியனாகத் திகழ்ந்த இந்திய அணி, மூன்றாவது வெற்றியை நோக்கி தற்போது ஆவலுடன் தயாராகி வருகிறது. குரூப் ‘பி’ பிரிவில் சிலி, சுவிட்சர்லாந்து, ஓமன் அணிகளுடன் இந்தியா இடம்பெற்றுள்ளது.

அணியின் முன்னாள் ஜாம்பவான் கோல்கீப்பர் பி.ஆர். ஸ்ரீஜேஷ் பயிற்சியாளராக செயல்படுவது அணிக்கு கூடுதல் பலம் சேர்த்துள்ளது. அண்மையில் மலேசியாவில் நடைபெற்ற ஜூனியர் சுல்தான் ஆஃப் ஜோஹோர் கோப்பையில் வெள்ளி பதக்கம் வென்ற இந்திய அணி, அதற்கு முன் பெர்லினில் 4 நாடுகள் போட்டி, பெல்ஜியம், நெதர்லாந்து, ஜெர்மனியில் நடந்த சுற்றுப் பயணங்களின் மூலம் வலுவான அனுபவத்தை பெற்றிருந்தது. பின்னர் பெங்களூரு சாய் மையத்தில் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு உலகக் கோப்பைக்கு தயாரானது.
உலகக் கோப்பை தொடருக்கான முன்னேற்பாடாக வங்கதேச ஜூனியர் அணி சென்னைக்குத் தரப்பிரவேசம் செய்தது. தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் வீரர்கள் மற்றும் அணி நிர்வாகத்தினருக்கு சிறப்பு வரவேற்பு அளிக்கப்பட்டது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!