உத்தரப் பிரதேச மாநிலம், பிரயாக்ராஜில் 17 வயது கல்லூரி மாணவி ஒருவருடன் இன்ஸ்டாகிராம் வழியாக பழகிய ராணுவ வீரர், மாணவி தன்னைத் திருமணம் செய்துக் கொள்ள வலியுறுத்திய பின்னர், அவளை கொன்று புதைத்த சம்பவம் பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
பிரயாக்ராஜில் தீபக் என்ற ராணுவ வீரர், 17 வயது கல்லூரி மாணவியுடன் பல மாதங்கள் இன்ஸ்டாகிராம் மூலம் தொடர்பு வைத்திருந்தார் என்று அறியப்படுகிறது. அவர்களது சந்திப்பு காதலாக மாறிய நிலையில், தனிமையில் உல்லாசமாகவும் இருந்துள்ளனர். இந்நிலையில், தன்னைத் திருமணம் செய்துக் கொள்ளும்படி தொடர்ந்து மாணவி அழுத்தமளித்தார்.
இதனைச் சரி செய்யவோ, மாணவியின் பெற்றோரிடம் பேசவோ, தனது பெற்றோரிடம் மாணவியை அறிமுகப்படுத்தவோ தீபக் தொடர்ந்து மறுத்து வந்ததால், மாணவிக்கு கோபம் அதிகரித்தது.
இந்நிலையில் கடந்த நவம்பர் 10ம் தேதி இருவரும் சந்திரசேகர் பூங்காவுக்குச் சென்றுள்ளனர். பூங்காவில் சுமார் ஏழு மணி நேரம் தங்கி இருந்துள்ளனர். அதன் பின்னர் மீண்டும், தன்னைத் திருமணம் செய்துக் கொள்ள மாணவி வலியுறுத்திய நிலையில், மாணவியைக் கொலை செய்ய தீபக் தீர்மானித்ததாக போலீசார் விசாரணையில் தெரிய வந்துள்ளது.

கொலை நடந்த பகுதியில் தீபக் காதலியை தனியாக அழைத்து சென்று, கழுத்தை அறுத்து கொலை செய்த பின்னர், ஒரு மரத்தின் கீழ் குழி தோண்டி அவருடைய உடலை புதைத்தார். சில நாட்களுக்குப் பிறகு உள்ளூர் மக்கள் அந்த இடத்தைத் தோண்டிய போது, புதைக்கப்பட்ட மாணவியின் உடல் கண்டெடுக்கப்பட்டது.
போலீசாரின் தகவலின்படி, மகளைக் காணவில்லை என்று தாய் காவல் நிலையத்தில் புகாரளித்த நிலையில், போலீசாரின் விசாரணையில் தீபக் குற்றத்தை ஒப்புக் கொண்டுள்ளார். காவல்துறை இதனை தீவிர குற்றமாக எடுத்து, முறையான வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றது.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்
ஐப்பசி மாசத்துல இந்த 6 ராசிக்காரர்களுக்கும் அதிர்ஷ்ட மழை
ஐப்பசியில இந்த 6 ராசிக்காரங்க யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போடாதீங்க
வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!