ரயில் உணவுப் பெட்டி ஒன்றில் (Pantry Car) உணவு மேலாளர் ஒருவர் தனது ஊழியரை மிருகத்தனமாகத் தாக்கும் காணொளி சமூக வலைதளங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
வெறும் ரூபாய் 5 அதிகம் வசூலித்ததால் (ஓவர்சார்ஜ்) ஏற்பட்ட கோபத்தில், மேலாளர் அந்த ஊழியரை தரையில் அமர வைத்து, சரமாரியாக அறைகிறார், காலால் எட்டி உதைக்கிறார். மேலும், அவரது முடியைப் பிடித்து இழுத்துத் தாக்குவதாகவும் காணொளியில் பதிவாகியுள்ளது.
இந்தத் தாக்குதலின் போது, அருகில் இருந்த சக பயணி ஒருவர் மேலாளரைச் சமாதானப்படுத்த முயன்ற போதும், அவர் கோபத்தில் தனது கட்டுப்பாட்டை இழந்து ஊழியரைத் தொடர்ந்து தாக்குகிறார். நிறுவனத்திற்குப் அபராதம் விதிக்கப்படலாம் என்ற அச்சத்தில் மேலாளர் இவ்வாறு நடந்து கொண்டதாகக் கூறப்பட்டாலும், ஒரு ஊழியரைச் சின்னத் தவறுக்காகக் கொடூரமாகத் தாக்குவது முற்றிலும் கண்டிக்கத்தக்கது என இணையவாசிகள் விமர்சித்து வருகின்றனர்.
“>