பீகார் சட்டசபை தேர்தல் தொடங்கிய பின்னர் நடிகை நீது சந்திரா தேர்தல் விழிப்புணர்வு தூதராக நியமிக்கப்பட்டிருந்தார். தமிழ், இந்தி உள்ளிட்ட பல மொழிகளில் நடித்து வரும் நீது சந்திரா, வாக்காளர்களுக்கு தேர்தல் விழிப்புணர்வு ஏற்படுத்தும் பணிகளை மேற்கொள்வதற்காக அந்த பொறுப்பில் இருந்தார்.

ஆனால் சில அரசியல் கட்சிகளுக்கு ஆதரவாக கருத்து தெரிவித்ததாக நடிகை நீது சந்திரா குறித்து தொடர்ந்து புகார்கள் வந்ததால், மாநில கூடுதல் தலைமை தேர்தல் அதிகாரி பிரசாந்த் குமார் தேர்தல் விழிப்புணர்வு தூதராக நியமிக்கப்பட்டதில் இருந்து நீக்கி உத்தரவிட்டார்.
இது குறித்து அவர் எழுதியிருக்கும் கடிதத்தில், “தேர்தல் நடைமுறையில் கட்சி சார்பின்றி செயல்பட வேண்டிய பொறுப்புக்கு எதிராக நீங்கள் சில அரசியல் கட்சிகளுக்கு ஆதரவாக கருத்து தெரிவித்துள்ளார். எனவே, தேர்தல் கமிஷன் தூதர் பொறுப்பில் இருந்து உடனடியாக நீக்கப்படுகிறீர்கள்” என்று தெரிவித்துள்ளார். இதையடுத்து, நீது சந்திரா தேர்தல் விழிப்புணர்வு பொறுப்பில் இருந்து அகற்றப்பட்டார்.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்
ஐப்பசி மாசத்துல இந்த 6 ராசிக்காரர்களுக்கும் அதிர்ஷ்ட மழை
ஐப்பசியில இந்த 6 ராசிக்காரங்க யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போடாதீங்க
வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!