இந்தியாவில் புற்றுநோய் பாதிப்பு ஆண்டுதோறும் உயரும் நிலையில், நாட்டில் 9 பேரில் ஒருவருக்கு வாழ்நாளில் புற்றுநோய் ஏற்படும் அபாயம் உள்ளதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐசிஎம்ஆர்) புதிய ஆய்வில் வெளிப்படுத்தியுள்ளது. 2022ஆம் ஆண்டு 14.6 லட்சம் புதிய நோயாளிகள் பதிவு செய்யப்பட்ட நிலையில், இது 2025ல் 15.7 லட்சமாக உயர்ந்துள்ளதாகவும், 2040ஆம் ஆண்டில் இந்த எண்ணிக்கை 22.1 லட்சமாக அதிகரிக்க வாய்ப்புள்ளதாக கணிக்கப்பட்டுள்ளது. குழந்தைகளிடமும் புற்றுநோய் வேகமாக அதிகரித்து வருவது கவலைக்குரியதாக நிபுணர்கள் கூறுகின்றனர்.

புகையிலை பயன்பாடு, மது அருந்துதல், உடல் பருமன், ஊட்டச்சத்து குறைபாடு, சுற்றுச்சூழல் மாசு, ஹெச்பிவி போன்ற தொற்றுகள் ஆகியவை புற்றுநோய் உருவாகக் காரணமான முக்கிய அபாயக் காரணிகளாக ஐசிஎம்ஆர் ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக நாட்டில் ஏற்படும் புற்றுநோய்களில் 40% புகையிலை காரணமாகவே வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. உலக அளவில் இந்தியா புற்றுநோய் பாதிப்பில் மூன்றாவது இடத்திலும், ஆசியாவில் இரண்டாவது இடத்திலும் இருப்பதாக அறிக்கை கூறுகிறது.
புற்றுநோயை ஆரம்பத்திலேயே கண்டறிந்தால் சிகிச்சை வெற்றிகரமாகும் என்பதால் மக்கள் தொடர்ந்து சோதனைகள் செய்து கொள்ள வேண்டும் என புற்றுநோய் நிபுணர்கள் அறிவுறுத்துகின்றனர். இதனுடன் உடற்பயிற்சி, சத்தான உணவுப் பழக்கம், மது மற்றும் புகையைத் தவிர்தல், உடல் எடை கட்டுப்பாடு, தேவையான தடுப்பூசிகள் போடுத்தல் போன்ற வாழ்க்கை முறை மாற்றங்களும் அவசியம் என வலியுறுத்தப்படுகிறது. தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டால் புற்றுநோய் பாதிப்பு மற்றும் அதனால் ஏற்படும் இறப்பு எண்ணிக்கையை குறைக்க முடியும் என நிபுணர்கள் கூறுகின்றனர்.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!