கோவை, மதுரை நகரங்களுக்கான மெட்ரோ ரயில் திட்டங்களை ஒன்றிய அரசு நிராகரித்தது.

20 லட்சம் மக்கள் தொகை இல்லாமல் மெட்ரோ ரயில் திட்டங்களுக்கு அனுமதி அளிக்க முடியாது எனக் கூறி தமிழ்நாடு அரசின் திட்ட அறிக்கையை ஒன்றிய அரசு திருப்பி அனுப்பியுள்ளது. மெட்ரோ திட்டங்களை கொண்டுவர போதிய மக்கள் தொகை இல்லை என்றும் விளக்கம் அளித்துள்ளது. கோவையில் 15.84 லட்சம் பேரும், மதுரையில் 15 லட்சம் மட்டுமே மக்கள் தொகை இருப்பதாக ஒன்றிய அரசு பதில் அளித்துள்ளது.
பாரதிய ஜனதா கட்சி ஆளும் உத்திரப்பிரதேசத்தின் இதே மக்கள் தொகை கொண்ட ஆக்ரா மெட்ரோவிற்கு 2019ஆம் ஆண்டு அனுமதி கொடுத்து உள்ளது. குருகிராம், புவனேஷ்வர், ஆக்ரா, மீரட் உள்ளிட்ட நகரங்ளின் மக்கள்தொகை 20 லட்சத்துக்கும் குறைவாக இருந்தபோதும் அங்கு மெட்ரோ திட்டங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.