சசிகுமாரின் மை லார்ட் படத்தின் முதல் சிங்கிள் ரிலீஸ் எப்போது? படக்குழு வெளியிட்ட அப்டேட்!
TV9 Tamil News November 19, 2025 12:48 AM

நடிகர் சசிக்குமார் (Sasikumar) தமிழ் சினிமாவில் வித்தியாசமான கதைகளை தேர்ந்தெடுத்து படங்களில் நடித்துவருகிறார். அந்த வகையில் இவரின் நடிப்பில் இறுதியாக வெளியான திரைப்படம் டூரிட்ஸ் பேமிலி (Tourist Family). இந்த படத்தை அறிமுக இயக்குநர் அபிஷன் ஜிவிந்த் (Abishan Jeevinth) இயக்கியிருந்தார். இவரின் இயக்கத்தில் வெளியான இப்படத்தில் சிம்ரன் கதாநாயகியாக நடித்திருந்தார். இந்த படமானது கடந்த 2025 மே 1ம் தேதியில் உலகமெங்கும் வெளியானது. இப்படத்துடன் சூர்யாவின் ரெட்ரோ படமும் வெளியான நிலையில், மக்களிடையே பாசிட்டிவ் விமர்சனங்களை பெற்றிருந்தது. இந்த படத்தை தொடர்ந்து வித்தியாசமான கதைகளைத் தேர்ந்தெடுத்து சசிகுமார் நடிக்க தொடங்கினார். அந்த வகையில் இவரின் நடிப்பில் ஃபிரிடம் (Freedom) என்ற படமானது வெளியாக காத்திருந்த நிலையில், சில காரணங்களால் தற்போதுவரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இந்த படத்தை அடுத்ததாக இவரின் நடிப்பில் மாறுபட்ட கதையில் தயாராகிவரும் படம்தான் மை லார்ட் (My Lord).

இப்படத்தை குக்கூ, ஜோக்கர் மற்றும் ஜப்பான் போன்ற படங்களை இயக்கிய இயக்குநர் ராஜு முருகன் (Raju Murugan) இயக்கிவருகிறார். மேலும் இப்படத்திற்கு இசையமைப்பாளர் சான் ரோல்டன் இசையமைத்துவரும் நிலையில், முதல் பாடல் ரிலீஸ் குறித்து படக்குழு அறிவித்துள்ளது. “எச காத்தா” என்ற என்ற முதல் பாடல், நாளை 2025 நவம்பர் 19ம் தேதியில் வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.

இதையும் படிங்க: தனுஷ் – தமிழரசன் பச்சைமுத்து கூட்டணியை உறுதி செய்த படக்குழு – வைரலாகும் பதிவு!

மை லார்ட் படத்தின் முதல் பாடல் ரிலீஸ் தேதி குறித்து அறிவித்த படக்குழு:

The first single #Esakaaththa from @SasikumarDir‘s #MyLord in the Voice of @Chinmayi & @dsathyaprakash will be released tomorrow!🎶

A soul-piece by @RSeanRoldan 💖
A film by @Dir_Rajumurugan
Produced by @Olympiamovis @ambethkumarmla#ChaithraJAchar @gurusoms #NiravShah… pic.twitter.com/xkPuwHGpUW

— Think Music (@thinkmusicindia)

இந்த முதல் பாடலை பாடகர்கள் சின்மயி மற்றும் சத்யபிரகாஷ் இணைந்து பாடியுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் இந்த பாடல் இந்த படத்தின் முக்கிய பாடல் என்றும் கூறப்படுகிறது.

சசிகுமாரின் மை லார்ட் படத்தின் ரிலீஸ் எப்போது :

சசிகுமாரின் இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக 3BHK திரைப்படத்தில் நடித்த நடிகை சைத்ரா ஆச்சார் இணைந்து நடித்துள்ளார். இவர் இப்படத்தில் புகைபிடிப்பது போன்ற காட்சிகளிலும் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இப்படத்தை ஒலிம்பியா மூவிஸ் என்ற தயாரிப்பு நிறுவனம் தயாரித்துவருகிறது. இதில் நடிகர் சசிகுமார் தாழ்த்தப்பட்ட நபர் வேடத்தில் நடித்திருப்பதாக கூறப்படுகிறது.

இதையும் படிங்க: சிறப்பான செயல்… தனது உதவி இயக்குநருக்கு புதிய கார் பரிசளித்த பிரதீப் ரங்கநாதன்!

தொடர்ந்து வித்தியாசமான வேடங்களில் இவர் தேர்ந்தெடுத்து நடித்துவருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் இப்படமானது வரும் 2026ம் ஆண்டு கோடை காலத்தில் வெளியாகி திட்டமிட்டுவருவதாக கூறப்படுகிறது. இப்படத்தை அடுத்ததாக கிட்டத்தட்ட 3 படங்கள் தனது கைவசத்தில் சசிகுமார் வைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.