நாளை நவம்பர் 19ம் தேதி, செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரத்தில், பல்லவ மன்னர்களின் சிற்பகலைச் சேரப்பட்ட சிறப்பு தலங்களான கடற்கரை கோயில், ஐந்துரதம், அர்ஜூனன்தபசு, கிருஷ்ண மண்டபம் மற்றும் வெண்ணைய் உருண்டை பாறைகள் போன்றவைகளை பொதுமக்கள் இலவசமாக பார்வையிட அனுமதிக்கப்படும் என்று தொல்லியல்துறை அறிவித்துள்ளது.

இந்த இலவச அனுமதி “உலக பாரம்பரிய வாரம்” தொடக்க நாளை முன்னிட்டு அறிவிக்கப்பட்டுள்ளது. நாளை நவம்பர் 19ம் தேதி தொடங்கி நவம்பர் 25ம் தேதி வரை பாரம்பரியத்தையும், நம் வரலாற்றுச் சிற்பங்களையும் படித்து அறிய வாய்ப்பு வழங்கப்படுகிறது.
இந்த வாய்ப்பினை தவறவிடாதீர்கள். நாளை சுற்றுலா பயணிகளும், உள்ளூர் பார்வையாளர்களுக்கு மட்டுமல்லாமல் பொதுமக்கள் அனைவருக்கும் மாமல்லபுரத்தில் அரிய சிற்பங்களை எந்தவிதமான கட்டணமும் இன்றி சுற்றிப் பார்க்க இலவசமாக அனுமதி அளிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அனுபவிக்கலாம்.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்
ஐப்பசி மாசத்துல இந்த 6 ராசிக்காரர்களுக்கும் அதிர்ஷ்ட மழை
ஐப்பசியில இந்த 6 ராசிக்காரங்க யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போடாதீங்க
வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!