சந்துரு இயக்கத்தில் நடிகை கீர்த்தி சுரேஷ் நடிப்பில் உருவான ‘ரிவால்வர் ரீட்டா’ திரைப்படம், பேஷன் ஸ்டூடியோஸ் மற்றும் தி ரூட் நிறுவனங்களின் தயாரிப்பில் இந்த மாதம் 28-ஆம் தேதி தமிழ், தெலுங்கு ஆகிய இரு மொழிகளிலும் வெளியாகிறது. ‘சரஸ்வதி சபதம்’ திரைப்படத்தை இயக்கிய சந்துரு, இந்த படத்துக்கும் சாண் ரோல்டன் இசை அமைத்துள்ளார்.
View this post on InstagramA post shared by Keerthy Suresh (@keerthysureshofficial)
படத்தின் பிரமோஷன் நிகழ்ச்சியில் பங்கேற்ற கீர்த்தி சுரேஷ், சமீபத்தில் அதிகம் பேசப்படும் ‘ஏஐ’ தொழில்நுட்பத்தைப் பற்றிய தனது கவலைகளை வெளிப்படுத்தினார். சமூக வலைத்தளங்களில் தன்னைப் போலவே உருவாக்கப்பட்ட ஏஐ படங்கள் பரவி வரும் நிலையைப் பற்றி அவர் தாக்கமேற்படும் விதமாக பேசினார்.

“இப்போல பெரிய பிரச்சனை ‘ஏஐ’. மனிதர்களே கண்டுபிடிச்ச தொழில்நுட்பம் நம்மை தாண்டி வேற லெவலுக்குப் போகுது. நான் போட்டதே இல்லாத உடையில் என்ன மாதிரி இருக்கும் ஏஐ படங்கள் இணையத்தில் வந்திருக்கு. சமீபத்தில் நடந்த படப்பூஜை புகைப்படங்களில் கூட ‘இந்த மாதிரி நான் போஸ் கொடுத்தேனா?’ன்னு நான் ஷாக் ஆயிட்டேன். பின் அது ஏஐ படம் தான் என்று தெரிந்தது. வளர வளர இந்த தொழில்நுட்பம் பயத்தை அதிகரிக்குது,” என கீர்த்தி சுரேஷ் தெரிவித்தார்.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!