T20 World Cup 2026 Schedule: வெளியானது 2026 டி20 உலகக் கோப்பை அட்டவணை.. முதல் போட்டியில் யார் யார் மோதல்?
TV9 Tamil News November 26, 2025 07:48 AM

2026 டி20 உலகக் கோப்பை (2026 T20 World Cup) வருகின்ற 2026ம் ஆண்டு பிப்ரவரி 7ம் தேதி தொடங்குகிறது. இந்த போட்டியின் முதல் போட்டியில் இந்திய அணியும் (Indian Cricket Team), அமெரிக்க அணியும் மோதவுள்ளது. 2026 டி20 உலகக் கோப்பையின் முதல் அரையிறுதி கொல்கத்தாவிலும், இரண்டாவது அரையிறுதி போட்டி கொழும்பில் நடைபெறவுள்ளது. அதேநேரத்தில், இறுதிப் போட்டி2026 மார்ச் 8ம் தேதி அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நடைபெறும். ஒருவேளை பாகிஸ்தான் அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறினால், பைனல் கொழும்பில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. 2026 டி20 உலகக் கோப்பையின் பிராண்ட் அம்பாசிடராக 2024 டி20 உலகக் கோப்பையை இந்திய அணிக்கு வென்று கொடுத்த முன்னாள் இந்திய கேப்டன் ரோஹித் சர்மா நியமிக்கப்பட்டுள்ளார்.

பிராண்ட் அம்பாசிடராக ரோஹித் சர்மா:

A two-time @t20worldcup champion, a record-setter across T20 World Cups and now the tournament ambassador for ICC Men’s #T20WorldCup 2026 🤩

The one and only 𝑯𝑰𝑻𝑴𝑨𝑵 Rohit Sharma 😎 pic.twitter.com/iAoBJKoAC0

— ICC (@ICC)

இந்திய அணி தனது முதல் போட்டியில் அமெரிக்காவை எதிர்கொள்கிறது. இந்திய அணி தனது குழுவில் உள்ள நான்கு அணிகளுடன் அடுத்தடுத்து மோதும். அதன்படி, முதலில் அமெரிக்காவிற்கு எதிராக ஆரம்பித்து, தொடர்ந்து, பாகிஸ்தான், நெதர்லாந்து மற்றும் நமீபியாவையும் எதிர்கொள்கிறது. மிகவும் எதிர்பார்க்கப்பட்ட இந்தியா – பாகிஸ்தான் இடையிலான போட்டி வருகின்ற 2026 பிப்ரவரி 15ம் தேதி இலங்கையில் உள்ள கொழும்பு கிரிக்கெர் ஸ்டேடியத்தில் மோதுகிறது.

2026 டி20 உலகக் கோப்பை அட்டவணை வெளியீடு:

Venues for the ICC Men’s #T20WorldCup 2026 have been locked in 🏟️ pic.twitter.com/PIYTvzRWly

— ICC (@ICC)

2026 டி20 உலகக் கோப்பைக்கான இந்தியாவின் அட்டவணை

இந்தியா, பாகிஸ்தான், அமெரிக்கா, நெதர்லாந்து மற்றும் நமீபியா ஆகிய அணிகள் ஒரே குழுவில் இடம் பெற்றுள்ளன.

  • இந்தியா vs அமெரிக்கா, 2026 பிப்ரவரி 7, மும்பை
  • இந்தியா vs நமீபியா, 2026 பிப்ரவரி 12, டெல்லி
  • இந்தியா vs பாகிஸ்தான், 2026 பிப்ரவரி 15, கொழும்பு
  • இந்தியா vs நெதர்லாந்து, 2026 பிப்ரவரி 18, அகமதாபாத்

ALSO READ: உலகக் கோப்பையில் இந்தியா-பாகிஸ்தான் போட்டி எப்போது? இன்று வெளியாகும் அட்டவணை!

20 அணிகள் பங்கேற்பு:

2024 டி20 உலகக் கோப்பையைப் போலவே, அடுத்த உலகக் கோப்பையிலும் 20 அணிகள் இடம்பெறும். இந்தியாவும் பாகிஸ்தானும் ஒரே குழுவில் இடம் பெற்றுள்ளன. இந்தியா-பாகிஸ்தான் போட்டி பிப்ரவரி 15 ஆம் தேதி கொழும்பில் நடைபெறும். முந்தைய பதிப்பைப் போலவே, எட்டு அணிகள் சூப்பர் 8 கட்டம், பின்னர் அரையிறுதி மற்றும் பின்னர் இறுதிப் போட்டி வழியாக முன்னேறும்.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.