இந்தியாவின் மிகப் பெரிய வங்கியான ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா வங்கி சம்பள சீட்டுகளை (PAY SLIP) இல்லால் வீட்டுக் கடன் வழங்குகிறது. சம்பள சீட்டு இல்லாததால் பலரின் வீட்டுக் கடன் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படுகின்றன. ஆனால் ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா வங்கி இதற்கு விதிவிலக்காக உள்ளது. சில மாற்று வழிகளை ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா வங்கி வழங்குகிறது. சம்பள சீட்டு வழங்காத நிறுவனங்களில் பணிபுரிபவர்கள் இதன் மூலம் வீட்டுக் கடன் பெறலாம்.
அதற்கு உங்கள் வங்கி கணக்கின் கடந்த ஆறு மாத அறிக்கைகளை (Bank account statement) சமர்ப்பிக்க வேண்டும். இந்த அறிக்கைகளில் உங்கள் சம்பளம் வரவு வைக்கப்பட்டதற்கான விவரங்கள் இருக்க வேண்டும். சில சமயங்களில் வங்கி அதிகாரிகள் கடந்த 12 மாதங்களுக்கான வங்கி கணக்கு அறிக்கைகளையும் கேட்கலாம். உங்களிடம் வேறு ஏதேனும் வங்கியில் கடன் இருந்தால், அதன் கடன் கணக்கு அறிக்கைகளையும் (loan account statements) கடந்த ஒரு வருடத்திற்கான விவரங்களை சமர்ப்பிக்க வேண்டியிருக்கும்.
சம்பள சீட்டு இல்லாத நிலையில், வருமான வரித் துறையால் சரிபார்க்கப்பட்ட கடந்த இரண்டு ஆண்டுகளுக்கான படிவம் 16 (Form 16) அல்லது வருமான வரி அறிக்கைகளின் (IT return filing) நகல்களையும் நீங்கள் சமர்ப்பிக்கலாம். உங்கள் கடன் மதிப்பெண் நன்றாக இருந்தால் வீட்டுக் கடன் ஒப்புதல் பெறுவதற்கான வாய்ப்புகள் அதிகரிக்கும். மேலும், அருகிலுள்ள SBI கிளைக்குச் சென்று வீட்டுக் கடன் குறித்த தெளிவான தகவல்களை நீங்கள்ப் பெறலாம். வீட்டுக் கடன் பெற சம்பள சீட்டுகள் அல்லது வங்கி கணக்கு அறிக்கைகள் மட்டுமே போதுமானவை அல்ல. பல்வேறு ஆவணங்கள் மற்றும் விதிமுறைகளையும் நிபந்தனைகளையும் பூர்த்தி செய்வது அவசியம்.
வீட்டுக் கடன் என்பது இன்றைய காலகட்டத்தில் வேலை செய்பவர்களின் வாழ்வில் ஒரு முக்கிய அங்கமாகிவிட்டது. சொந்த ஊரை விட்டு வெளியூர்களில் வேலை செய்பவர்கள், வீடு வாங்க வீட்டுக் கடனை தேர்ந்தெடுக்கின்றனர். வீட்டுக் கடன் பெறுவதற்கு நீண்ட செயல்முறைகள் உள்ளன. இதில் பலவிதமான ஆவணங்களைச் சமர்ப்பிக்க வேண்டும். பல வங்கிகள் வீட்டுக் கடனுக்கு சம்பள சீட்டுகளைக் கேட்கின்றன. சம்பள சீட்டு இல்லாமல் பல வங்கிகள் வீட்டுக் கடன் விண்ணப்பங்களை உடனடியாக நிராகரிக்கின்றன. இருப்பினும், ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா வங்கி சம்பள சீட்டுகள் இல்லாமலும் வீட்டுக் கடன் வழங்குகிறது.
உங்களிடம் நல்ல கடன் மதிப்பெண் இருந்தால், உங்கள் வீட்டுக் கடன் விண்ணப்பம் அங்கீகரிக்கப்படுவதற்கான வாய்ப்புகள் அதிகரிக்கும். அதோடு, நீங்கள் உங்கள் அருகிலுள்ள SBI கிளைக்குச் செல்லலாம். அங்கு வீட்டுக் கடன்கள் பற்றிய தெளிவான தகவல்களைப் பெற்று அடுத்த கட்ட முயற்சியை மேற்கொள்ளலாம். சம்பள சீட்டுகள் அல்லது கணக்கு அறிக்கைகள் வீட்டுக் கடன் பெறுவதற்கான ஒரே தேவைகள் அல்ல என்பதை நினைவில் கொள்ளுங்கள். வீட்டுக் கடன் பெற பல்வேறு ஆவணங்கள், பல்வேறு விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள் இருப்பது முக்கியம்.