சென்னை, நவம்பர் 26 : தங்கம் கடந்த சில நாட்களாக ரூ.94,000-க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில், இன்று (நவம்பர் 26, 2025) தங்கம் ரூ.94,000-த்தை தாண்டி விற்பனை செய்யப்படுகிறது. குறிப்பாக கடந்த இரண்டு நாட்களாகவே தங்கம் விலை (Gold Price) உயர்வை நோக்கி சென்றுக்கொண்டு இருக்கிறது. இன்றைய நிலவரப்படி ஒரு கிராம் தங்கம் ரூ.11,800-க்கும், ஒரு சவரன் ரூ.94,400-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இந்த நிலையில், இன்றைய தங்கம் விலை நிலவரம் குறித்து விரிவாக பார்க்கலாம்.
விலை சரிவுக்கு பிறகு மீண்டும் உயர தொடங்கிய தங்கம்அக்டோபர் மாதம் வரை 2025 ஆம் ஆண்டு தங்கத்திற்கு ஜாக்பாட்டான ஆண்டாக இருந்தது. குறிப்பாக அக்டோபர் 21, 2025 அன்று தங்கம் ரூ.97,000-த்தை தாண்டி விற்பனை செய்யப்பட்டது. இதே நிலை நீடிக்கும் பட்சத்தில் தங்கம் ரூ.1 லட்சத்தை தாண்டும் என எதிர்ப்பார்க்கப்பட்டது. ஆனால், தங்கம் விலை அதிரடியாக குறைந்து பொதுமக்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்தது. அதாவது, அக்டோபர் 22, 2025 அன்று தங்கம் சர்வதேச சந்தையில் தங்கம் கடும் சரிவை சந்தித்தது. அதாவது அன்றைய தினம் மட்டும் தங்கம் 6.3 சதவீதம் சரிவை சந்தித்தது. அதனை தொடர்ந்து தங்கம் ரூ.90,000 முதல் ரூ.92,000 வரை விற்பனை செய்யப்பட்டு வந்தது. இந்த நிலையில், இன்று மீண்டும் ரூ.94,000-த்தை தாண்டியுள்ளது.
இதையும் படிங்க : Home Loan : வீட்டு கடனை சுலபமாக அடைக்க சில டிப்ஸ்.. கண்டிப்பா ஃபாலோ பண்ணுங்க!
மீண்டும் ரூ.94,000-த்தை தாண்டி விற்பனை செய்யப்படும் தங்கம்
| தேதி | ஒரு கிராம் | ஒரு சவரன் |
| 17 நவம்பர் 2025 | ரூ.11,540 | ரூ.92,320 |
| 18 நவம்பர் 2025 | ரூ.11,400 | ரூ.91,200 |
| 19 நவம்பர் 2025 | ரூ.11,600 | ரூ.92,800 |
| 20 நவம்பர் 2025 | ரூ.11,500 | ரூ.92,000 |
| 21 நவம்பர் 2025 | ரூ.11,460 | ரூ.91,680 |
| 22 நவம்பர் 2025 | ரூ.11,630 | ரூ.93,040 |
| 23 நவம்பர் 2025 | ரூ.11,630 | ரூ.92,040 |
| 24 நவம்பர் 2025 | ரூ.11,520 | ரூ.93,160 |
| 25 நவம்பர் 2025 | ரூ.11,720 | ரூ.93,760 |
| 26 நவம்பர் 2025 | ரூ.11,800 | ரூ.94,400 |
கடந்த 10 நாட்களாக ரூ.91,000, ரூ.92,000 என்ற நிலையில் தங்கம் விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில், தற்போது ரூ.94,000-த்தை தாண்டி விற்பனை செய்யப்படுகிறது.
இதையும் படிங்க : ரூ. 5,000-ல் SIP தொடங்கினால் எத்தனை ஆண்டுகளில் ரூ.1 கோடி பெறலாம்.. சிம்பிள் ஃபார்முலா!
இன்றைய தங்கம் விலைஇன்று (நவம்பர் 26, 2205) தங்கம் கிராமுக்கு ரூ.80 உயர்ந்து ஒரு கிராம் 22 காரட் தங்கம் ரூ.11,800-க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதேபோல சவரனுக்கு ரூ.640 உயர்ந்து ஒரு சவரன் ரூ.94,400-க்கு விற்பனை செய்யப்படுகிறது.