இந்தியாவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில், தென் ஆப்பிரிக்கா அணி 549 ரன்களை இலக்காக நிர்ணயித்த நிலையில், தாமதமாக டிக்ளேர் செய்தது குறித்து அந்த அணியின் பயிற்சியாளர் ஷுக்ரி கான்ராட் விளக்கம் அளித்துள்ளார்.
தென் ஆப்பிரிக்கா தனது இரண்டாவது இன்னிங்சில் 5 விக்கெட்டுக்கு 260 ரன்கள் எடுத்திருந்தபோது டிக்ளேர் செய்தது. இதுகுறித்து அவர் கூறுகையில், “இந்திய வீரர்கள் மைதானத்தில் அதிக நேரம் ஃபீல்டிங் செய்து விரக்தியில் தவிக்க வேண்டும் என்று நினைத்தோம். அவர்களை வெற்றி வாய்ப்பிலிருந்து முற்றிலும் வெளியேற்றும் வரை நாங்கள் பேட்டிங் செய்து, ‘மீதமிருக்கும் நேரத்தில் முடிந்தால் பேட்டிங் செய்து தப்பித்துக்கொள்ளுங்கள்’ என்ற நிலைக்கு அவர்களைத் தள்ளுவதே எங்கள் திட்டம்.
அதனால்தான் தாமதமாக டிக்ளேர் செய்தோம். எனினும், அவர்கள் இவ்வளவு எளிதாகச் சரிவார்கள் என்று நாங்கள் நினைக்கவில்லை. இந்தியா இன்னும் 522 ரன்கள் அடிக்க வேண்டிய நிலையில், தென் ஆப்பிரிக்கா வெற்றி பெற 8 விக்கெட்டுகளை வீழ்த்த வேண்டும்.