WTC Points Table 2025-27: WTC புள்ளிகள் பட்டியலில் சரிந்த இந்தியா.. பாகிஸ்தான் முன்னிலை.. யார் முதலிடம்?
TV9 Tamil News November 26, 2025 09:48 PM

குவஹாத்தியில் நடைபெற்ற இந்தியா – தென்னாப்பிரிக்கா இடையிலான 2வது டெஸ்ட் (India – South Africa 2nd Test) போட்டியில் ஏற்பட்ட தோல்வி 2025 – 27 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிகள் பட்டியலில் இந்திய அணிக்கு (Indian Cricket Team) மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. அதன்படி, புள்ளிகள் பட்டியலில் இந்திய அணி தற்போது பாகிஸ்தானை விட பின்தங்கியுள்ளது. பாகிஸ்தான் இப்போது 4வது இடத்திற்கு முன்னேறிய நிலையில், இந்தியா 5வது இடத்திற்கு சரிந்துள்ளது. குவஹாத்தியில் இந்திய அணிக்கு 549 ரன்கள் என்ற மிகப்பெரிய இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. இந்த இலக்கை துரத்திய இந்திய அணி இரண்டாவது இன்னிங்ஸ் வெறும் 140 ரன்களுக்குள் ஆல் அவுட்டாகி தோல்வியை சந்தித்தது. இதன்மூலம், இந்திய அணி 0-2 என்ற கணக்கில் தென்னாப்பிரிக்காவிடம் தோல்வியை சந்தித்தது.

முன்னதாக, கொல்கத்தா டெஸ்டில் தென்னாப்பிரிக்கா அணி இந்தியாவை 30 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்தது. இப்போது, ​​ரிஷப் பண்ட் தலைமையில் இந்திய அணி குவஹாத்தியில் 408 ரன்கள் வித்தியாசத்தில் மிகப்பெரிய தோல்வியை சந்தித்தது. 25 ஆண்டுகளுக்குப் பிறகு சொந்த மண்ணில் நடந்த டெஸ்ட் தொடரில் தென்னாப்பிரிக்கா இந்தியாவை ஒயிட்வாஷ் செய்தது.

ALSO READ: இந்தியாவை 408 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்த தென்னாப்பிரிக்கா!

WTC புள்ளிகள் பட்டியலில் இந்தியா சரிவு:

தென்னாப்பிரிக்க டெஸ்ட் தொடருக்கு முன்பு, இந்திய அணி 4வது இடத்தில் இருந்தது ஆனால் தொடரை 0-2 என்ற கணக்கில் இழந்த பிறகு, இந்திய அணி 5வது இடத்திற்கு சரிந்துள்ளது. இதன்மூலம், இந்தியாவின் புள்ளிகள் சதவீதம் இப்போது 48.15 ஆக சரிந்தது. இதன்மூலம், 2025-27 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு இந்திய அணி செல்வதற்கு வெகு தொலைவில் இருப்பதாக தெரிகிறது. அதேநேரத்தில், பாகிஸ்தான் 50 புள்ளி சதவீதத்துடன், புள்ளிகள் பட்டியலில் இந்தியாவை விட முன்னிலையில் உள்ளது.

யார் முதலிடம்..?

WTC POINTS TABLE 2025-2026#indvssa #viratkohli #rohitsharma #shubmangill #bharatarmy #COTI 🇮🇳 #rishabhpant #jaspritbumrah pic.twitter.com/ZsLEOfGxlt

— The Bharat Army (@thebharatarmy)


ஆஸ்திரேலியா தற்போது புள்ளிப்பட்டியலில் முதலிடத்தில் உள்ளது. இதுவரை ஆஸ்திரேலிய அணி இதுவரை விளையாடிய 4 போட்டிகளிலும் வெற்றி பெற்று 100 புள்ளி சதவீதத்துடன் உள்ளது. இந்தியாவுக்கு எதிரான தொடரை வென்ற தென்னாப்பிரிக்கா, 75 புள்ளி சதவீதத்துடன் இரண்டாவது இடத்தை உறுதி செய்துள்ளது. அதேநேரத்தில், இலங்கை அணி தற்போது 3வது இடத்தில் உள்ளது.

  • ஆஸ்திரேலியா
  • தென்னாப்பிரிக்கா
  • இலங்கை
  • பாகிஸ்தான்
  • இந்தியா
  • இங்கிலாந்து
  • வங்கதேசம்

ALSO READ: 25 ஆண்டுகளுக்கு பிறகு! டெஸ்ட் தொடரை வென்ற SA.. இந்தியா மோசமான சாதனை படைப்பு!

25 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியாவில் தென்னாப்பிரிக்கா வெற்றி பெற்றது.
தென்னாப்பிரிக்கா 25 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியாவில் டெஸ்ட் தொடரை வென்றுள்ளது. தென்னாப்பிரிக்கா கடைசியாக 2000ம் ஆண்டு தென்னாப்பிரிக்கா அணியை டெஸ்ட் தொடரில் தோற்கடித்தது. அப்போது, தென்னாப்பிரிக்கா அணியின் கேப்டனாக ஹான்சி குரோன்ஜே, இந்திய அணியின் கேப்டனாக சச்சின் டெண்டுல்கர் இருந்தார். அதன் பிறகு, தென்னாப்பிரிக்கா இந்தியாவில் விளையாடிய 13 டெஸ்ட் போட்டிகளில் இரண்டில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.