IND vs SA 2nd Test: 25 ஆண்டுகளுக்கு பிறகு! டெஸ்ட் தொடரை வென்ற SA.. இந்தியா மோசமான சாதனை படைப்பு!
TV9 Tamil News November 26, 2025 11:48 PM

இந்திய மண்ணில் டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்திய அணியின் (Indian Cricket Team) தொடர் தோல்விகள் மிகப்பெரிய கவலையை எழுப்பியுள்ளது. கொல்கத்தா டெஸ்ட் போட்டியின் தோல்விக்கு பிறகு, தென்னாப்பிரிக்கா மீண்டும் குவஹாத்தியில் இந்திய அணியை தோற்கடித்தது. குவஹாத்தியில் நடந்த இரண்டாவது டெஸ்டில் தென்னாப்பிரிக்கா அணி (South Africa Cricket Team) 408 ரன்கள் வித்தியாசத்தில் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. இதன் மூலம், தென்னாப்பிரிக்கா தொடரை 2-0 என்ற கணக்கில் வென்றது. 25 ஆண்டுகளில் தென்னாப்பிரிக்க அணி இந்தியாவில் டெஸ்ட் தொடரை வெல்வது இதுவே முதல் முறை. அதேநேரத்தில், டெஸ்ட் கிரிக்கெட்டில் ரன்கள் அடிப்படையில், இது இந்தியாவின் மிகப்பெரிய டெஸ்ட் தோல்வியாகும்.

ALSO READ: இந்தியாவை 408 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்த தென்னாப்பிரிக்கா!

25 ஆண்டுகளுக்குப் பிறகு..!

South Africa win the 2nd Test by 408 runs.

They also clinch the #INDvSA Test Series by 2-0.

Scorecard ▶️ https://t.co/Hu11cnrocG#TeamIndia | @IDFCFIRSTBank pic.twitter.com/NBSFW4xtxP

— BCCI (@BCCI)


தென்னாப்பிரிக்கா கடைசியாக 2000ம் ஆண்டு ஹான்சி குரோன்ஜே தலைமையில் இந்தியாவில் டெஸ்ட் தொடரை வென்றது. அந்த நேரத்தில், குரோன்ஜே தென்னாப்பிரிக்காவை இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் 2-0 என்ற கணக்கில் வெற்றிக்கு வழிநடத்தினார். அப்போது, இந்திய அணிக்கு கேப்டனாக சச்சின் டெண்டுல்கர் இருந்தார். தற்போது, ​​25 ஆண்டுகளுக்குப் பிறகு, டெம்பா பவுமா அந்த சாதனையை மீண்டும் செய்துள்ளார். 408 ரன்கள் வித்தியாசத்தில் பெற்ற இந்த வெற்றி தென்னாப்பிரிக்காவின் டெஸ்ட் கிரிக்கெட்டின் இரண்டாவது பெரிய வெற்றியாகும்.

குவஹாத்தி டெஸ்டில், தென்னாப்பிரிக்கா நான்காவது இன்னிங்ஸில் இந்தியாவுக்கு 549 ரன்கள் என்ற இலக்கை நிர்ணயித்தது. மிகப்பெரிய இலக்கை துரத்திய இந்திய அணி 140 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இந்த இன்னிங்ஸில்சுழற்பந்து வீச்சாளர் சைமன் ஹார்மர் அதிகபட்சமாக 6 விக்கெட்டுகளை வீழ்த்தினார். பேட்டிங் மற்றும் பந்து வீச்சில் அற்புதமாக செயல்பட்ட மார்கோ ஜான்சன், ஆட்ட நாயகனாக தேர்வு செய்யப்பட்டார். அதேநேரத்தில், சைமன் ஹார்மர் தொடரின் நாயகனாகவும் தேர்வு செய்யப்பட்டார்.

சொந்த மண்ணில் தொடர்ச்சியாக இரண்டாவது டெஸ்ட் தொடரை முழுமையாக இந்திய அணி இழந்தது. முன்னதாக, நியூசிலாந்து அணி 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை முழுமையாக கைப்பற்றியிருந்தது. தற்போது, ​​தென்னாப்பிரிக்கா 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை முழுமையாக கைப்பற்றியுள்ளது. கிட்டத்தட்ட 40 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா சொந்த மண்ணில் தொடர்ச்சியாக இரண்டு டெஸ்ட் தொடர்களை இழந்தது இதுவே முதல் முறை.

ALSO READ: இந்தியாவை மண்டியிட வைப்போம்.. SA கோச் சர்ச்சை கருத்து.. இந்திய ரசிகர்கள் கோபம்!

இந்திய அணியை சொந்த மண்ணில் ஒயிட்வாஷ் செய்த அணிகள்:
  • 0-2 vs தென்னாப்பிரிக்கா, 2000
  • 0-3 vs நியூசிலாந்து, 2024
  • 0-2 vs தென்னாப்பிரிக்கா, 2025
டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்தியாவின் மிகப்பெரிய தோல்விகள் (ரன் வித்தியாசத்தில்)
  • 408 ரன்கள் vs தென்னாப்பிரிக்கா, குவஹாத்தி, 2025
  • 342 ரன்கள் vs ஆஸ்திரேலியா, நாக்பூர், 2004
  • 341 ரன்கள் vs பாகிஸ்தான், கராச்சி, 2006
  • 337 ரன்கள் vs ஆஸ்திரேலியா, மெல்போர்ன், 2007
  • 333 ரன்கள் vs ஆஸ்திரேலியா, புனே, 2017
  • 329 ரன்கள் vs தென்னாப்பிரிக்கா, கொல்கத்தா, 1996
© Copyright @2025 LIDEA. All Rights Reserved.