இந்தியா- தென் ஆப்பிரிக்கா – இரண்டாம் டெஸ்ட் – கௌஹாத்தி –
இந்திய அணியின் மோசமான ஆட்டம்
முனைவர் கு.வை. பாலசுப்பிரமணியன்
தென் ஆப்பிரிக்கா முதல் இன்னிங்க்ஸ் (489, முத்துசாமி 109, மார்கோ ஜேன்சன் 93, மர்க்ரம் 38, ரியன் ரிக்கில்டன் 35, ட்ரிஸ்டன் ஸ்டப்ஸ் 49, கெய்ல் வெர்ரிய்னெ 45, டெம்பா பௌமா 41, டோனி டி ஸோரி 28, பும்ரா 2/75, சிராஜ் 2/106, குல்தீப் 4/115, ஜதேஜா 2/94) இரண்டாவது இன்னிங்க்ஸ் (260/5 டிக்ளேர்ட், ரியன் ரிக்கிள்டன் 35, மர்க்ரம் 29, ஸ்டப்ஸ் 94, டோனி டி சோரி 49, முல்டர் 35, ஜதேஜா 4/62, வாஷிங்க்டன் சுந்தர் 1/67) இந்திய அணி முதல் இன்னிங்க்ஸ் (201, ஜெய்ஸ்வால் 58, கே.எல். ராகுல் 22, வாஷிங்க்டன் சுந்தர் 48, மார்கோ ஜேன்சன் 6/48, சைமன் ஹார்மர் 3/64, கேசவ் மஹராஜ் 2/39) இரண்டாவது இன்னிங்க்ஸ் (140, ரவீந்த ஜதேஜா 54, வாஷிங்க்டன் சுந்தர் 16, சைமன் ஹார்மர் 6/37, கேசவ் மஹராஜ் 2/37, மார்கோ ஜேன்சன் 1/23, முத்துசாமி 1/21) தென் ஆப்பிரிக்க அணி 408 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது.
இந்திய அணி ஒரு மோசமான தோல்வியைச் சந்தித்தது. தென் ஆப்பிரிக்க அணி தொடரை வென்றது. காரணங்கள் பல. முதலில் பிட்ச். ஆடுகளம் சுழலுக்குச் சாதகமாக அமைக்கப்பட்டிருக்கிறது.
தென் ஆப்பிரிக்க அணியின் சைமன் ஹார்மர் முதல் இன்னிங்க்ஸில் மூன்று விக்கட்டுகளையும் இரண்டாவது இன்னிங்க்சில் 6 விக்கட்டுகளையும் எடுத்தார். அந்த அணியின் சுழல் பந்து வீச்சாளர்கள் மொத்தம் 131 ரன்கள் முதல் இன்னிங்க்ஸிலும் இரண்டாவது இன்னிங்க்சில் 75 ரன்னும் கொடுத்தனர். ஆனால் இந்திய சுழல் பந்து வீச்சாளர்கள் முதல் இன்னிங்க்சில் 265 ரன்னும் இரண்டாவது இன்னிசில் 177 ரன்னும் கொடுத்தனர்.
இந்திய சுழல்பந்துவீச்சாளர்களில் ஒருவர் ஒரு முனையில் இருந்து ரன் கொடுக்காமல் பந்துவீசினால் மற்றொருவர் மறு முனையில் இருந்து ஃப்லைட்டட் பந்து வீசவேண்டும். ஆனால் அப்படி நடக்கவில்லை. வேகப் பந்து வீச்சாளர்களில் நிதிஷ் குமார் ரெட்டி இரண்டு இன்னிங்க்சிலும் சேர்த்து 10 ஓவர்தான் வீசினார். இதனைப் பார்க்கும்போது இது என்ன மாதிரியான அணித் தேர்வு என்று புரியவில்லை.
பேட்டிங் ரொம்ப மோசம். டெஸ்ட் கிரிக்கட் போல ஒருவரும் பேட்டிங் செய்யவில்லை. முதல் இன்னிங்க்சில் அதிக பந்துகளைச் சந்தித்தவர் குல்தீப் யாதவ் (134 பந்துகள்). முன்னணி பேட்டர்கள் ராகுல், சாய் சுதர்ஷன், துருவ் ஜுரல், பந்த் ஆகியோர் சந்தித்த மொத்த பந்துகள் 122. இரண்டாவது இன்னிங்க்சில் அதிக பந்துகளைச் சந்தித்தவர்கள் சாய் சுதர்ஷன் (139 பந்து) மற்றும் ஜதேஜா (87 பந்து). குல்தீப் யாதவ் 44 பந்துகள் சந்தித்தார். மற்ற பேட்டர்கள் 115 பந்துகள் மட்டுமே சந்த்தித்தனர். இப்படியிருந்தால் ஒரு டெஸ்டில் எப்படி ஜெயிப்பது?
அணித் தேர்வுக்குழு பல தவறுகளைச் செய்திருக்கிறது. துருவ் ஜுரலுக்குப் பதிலாக கருண் நாயர் அல்லது சர்ஃப்ராஸ் கான் இருவரில் ஒருவரைத் தேர்வு செய்திருக்கலாம். நிதீஷ் குமார் ரெட்டிக்குப் பதிலாக ஷமி அல்லது அர்ஷ்தீப் சிங்கைத் தேர்வு செய்திருக்கலாம்.
மூன்றாவது இடத்தில் யார் ஆடுவது என்பதில் குழப்பம் நீடிக்கிறது. முதல் டெஸ்டில் வாஷிங்க்டன் சுந்தர் விளையாடினார். இந்த டெஸ்டில் சாய் சுதர்ஷன் ஆடினார். ஜெய்ஸ்வாலும் பந்தும் இன்னமும் டி20 விளையாட்டில் இருந்து விடுபடவில்லை.
டெம்பா பவுமா தென்னுடைய வெற்றிச் சாதனையை தொடருகிறார். அணியின் பயிற்சியாளரும், தேர்வுக்குழுவும் தீவிரமாகச் சிந்திக்க வேண்டிய நேரம். இல்லாவிடில் இந்திய அணி இத்தகைய தோல்விகளை மீண்டும் மீண்டும் சந்திக்கும்.
IND Vs SA Test: இளம் இந்திய அணியின் மோசமான டெஸ்ட் தோல்வி! News First Appeared in Dhinasari Tamil