தமிழக வெற்றி கழகத்தில் சற்று முன் விஜய் முன்னிலையில் அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் கட்சியில் இணைந்துள்ளார். நேற்று இரட்டை இலை சின்னத்தில் நின்று போட்டியிட்டதால் கோபி எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்த அவர் தற்போது விஜய் முன்னிலையில் அதிகாரப்பூர்வமாக அந்த கட்சியில் இணைந்தார்.
அவரது ஆதரவாளர்களான முன்னாள் எம்பி சத்தியபாமா உள்ளிட்ட 50க்கும் மேற்பட்டோர் விஜய் கட்சியில் இணைந்துள்ளனர். எம்ஜிஆர் காலத்தில் இருந்தே அரசியலில் இருக்கும் செங்கோட்டையனை விஜய் தன்னுடைய கட்சியில் இணைத்தது தற்போது பேசும் பொருளாக மாறி உள்ள நிலையில் அவருக்கு அரசியல் அனுபவம் அதிகம் என்பதால் விஜய் கட்சிக்கு இது பெரிய பலமாக அமையும் என்று கூறப்படுகிறது.
ஏனெனில் ஜெயலலிதா மறைவுக்கு பிறகு செங்கோட்டையன் தான் அடுத்த முதல்வர் என்றே பேசப்பட்டது. இந்த நிலையில் கட்சியில் சேர்ந்த செங்கோட்டையனுக்கு உடனடியாக இரண்டு முக்கிய பொறுப்புகளை விஜய் வழங்கியுள்ளார். அதன்படி நிர்வாகக் குழுவின் தலைமை ஒருங்கிணைப்பாளர் மற்றும் ஈரோடு, கோவை, நீலகிரி மற்றும் திருப்பூர் ஆகிய மாவட்டங்களுக்கு அமைப்பு செயலாளர் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.