WPL Auction 2026: டெல்லியில் இன்று மெகா ஏலம்.. மகளிர் பிரீமியர் லீக்கில் படையெடுக்கும் வீராங்கனைகள்!
TV9 Tamil News November 27, 2025 02:48 PM

ஹர்மன்ப்ரீத் கவுர் தலைமையிலான இந்திய மகளிர் கிரிக்கெட் அணி (Indian Womens Cricket Team) முதன்முறையாக ஒருநாள் உலகக் கோப்பையை வென்ற 25 நாட்களுக்குப் பிறகு, மகளிர் பிரீமியர் லீக் (WPL) மெகா ஏலம் நடைபெற உள்ளது. இன்று அதாவது 2025 நவம்பர் 27ம் தேதி புது தில்லியில் 5 அணிகளும் மகளிர் பிரீமியர் லீக் 2026 சீசனுக்காக தங்கள் அணிகளை மறுசீரமைக்கவுள்ளது. கடந்த 2023ம் ஆண்டு WPL தொடங்கப்பட்டதிலிருந்து லீக்கின் முதல் மெகா ஏலம் நடைபெறவுள்ளதால் மிகப்பெரிய எதிர்பார்ப்பு நிலவுகிறது. ஒவ்வொரு அணியும் சில வீரர்களைத் தக்க வைத்துக் கொண்டுள்ளன. மேலும் அவர்களைச் சுற்றியே அணி கட்டமைக்கப்பட வேண்டும். அந்தவகையில், ஒவ்வொரு அணியும் எவ்வளவு பணம் வைத்திருக்கிறது என்பது பற்றிய அனைத்து விவரங்களையும் தெரிந்து கொள்வோம்.

ALSO READ: வெளியானது 2026 டி20 உலகக் கோப்பை அட்டவணை.. முதல் போட்டியில் யார் யார் மோதல்?

எத்தனை மணிக்கு ஏலம் தொடங்குகிறது..?

மகளிர் பிரீமியர் லீக் 2026 ஏலம் பிற்பகல் 3:30 மணிக்கு புது தில்லியில் தொடங்குகிறது. மிகுந்த எதிர்பார்ப்பு மற்றும் ஊகங்கள் இருந்தபோதிலும், BCCI இன்னும் ஐந்து அணிகளுக்கு மேல் விரிவுப்படுத்தவில்லை. அதன்படி, தொடக்க சீசன் முதல் மும்பை இந்தியன்ஸ், டெல்லி கேபிடல்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர், UP வாரியர்ஸ் மற்றும் குஜராத் ஜெயண்ட்ஸ் மட்டுமே லீக்கில் பங்கேற்கும். இந்த அனைத்து அணிகளும் லீக்கின் முதல் மெகா ஏலத்தில் பங்கேற்று முக்கிய வீரரையும் வாங்கின. இருப்பினும், இந்த முறை, ஒவ்வொரு அணியும் 2 முதல் 3 வீரர்களைத் தக்கவைத்துக்கொண்டதால், இது உண்மையிலேயே மெகா ஏலமாக இருக்கும்.

இந்த முறை ஏலத்தில் எத்தனை வீராங்கனைகள் பங்கேற்கின்றன..?

Everything you need to know 🧾

Here’s your all-in-one guide to the #TATAWPL Mega Auction 2026 🙌

Follow the #TATAWPLAuction 2026 tomorrow on https://t.co/jP2vYAWukG 💻 pic.twitter.com/J7kCt23CEx

— Women’s Premier League (WPL) (@wplt20)


மகளிர் பிரீமியர் லீக் ஏலத்திற்கு மொத்தம் 277 வீராங்கனைகள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 194 பேர் இந்திய வீராங்கனைகளும், 83 பேர் வெளிநாட்டு வீராங்கனைகளும் ஏலத்தில் பங்கேற்கின்றனர்.

எந்த அணிக்கு அதிக வீராங்கனைகள் தேவை?

மகளிர் பிரீமியர் லீக்கின் விதிகளின்படி, ஒரு அணியில் அதிகபட்சம் 18 வீரர்களும் குறைந்தபட்சம் 15 வீரர்களும் இருக்கலாம். தக்கவைப்பைக் கருத்தில் கொண்டு, UP வாரியர்ஸ் அணிக்கு அதிகபட்சமாக 17 வீரர்கள் தேவையாக உள்ளது. ஏனெனில் அந்த அணி ஒரே ஒரு வீரரை மட்டுமே தக்க வைத்துக் கொண்டது. எந்த அணியிலும் ஆறுக்கும் மேற்பட்ட வெளிநாட்டு வீரர்கள் இருக்க முடியாது.

எந்த உரிமையாளரிடம் எவ்வளவு பணம் மீதம் உள்ளது?
  • UP வாரியர்ஸ் – ரூ. 14.5 கோடி (அதிகபட்சம்)
  • குஜராத் ஜெயண்ட்ஸ் – ரூ 9 கோடி
  • ஆர்சிபி – ரூ 6.15 கோடி
  • மும்பை இந்தியன்ஸ் – ரூ 5.75 கோடி
  • டெல்லி கேபிடல்ஸ் – ரூ 5.70 கோடி

ALSO READ: 20 ஆண்டுகளுக்கு பிறகு! இந்தியாவில் 2030ல் காமன்வெல்த் போட்டி.. குஷியில் விளையாட்டு வீரர்கள்!

முதல் முறையாக Right to Match:

WPL-ல் முதல் முறையாக, RTM (Right to Match) அட்டை விருப்பம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அதாவது, ஒரு வீரர் ஏலத்தில் அதிக விலைக்கு ஏலம் எடுக்கப்பட்டவராக இருந்தாலும், முன்னாள் அணி அவரை திரும்ப வாங்க விரும்பினால், அவர்கள் RTM அட்டையைப் பயன்படுத்தி ஏலத்தில் பெற்ற அதே தொகையை கொடுத்து அவரை வாங்கலாம். இருப்பினும், அனைத்து உரிமையாளர்களிடமும் RTM விருப்பம் இல்லை. குஜராத் மூன்று RTM அட்டைகளையும், பெங்களூரு ஒரு அட்டையையும், UP வாரியர்ஸிடம் 4 அட்டைகளையும் கொண்டுள்ளது. அதேநேரத்தில், மும்பை மற்றும் டெல்லி அணிகளுக்கு RTM விருப்பம் இல்லை, ஏனெனில், இந்த இரு அணிகளும் அதிகபட்சமாக 5 வீரர்களைத் தக்க வைத்துக் கொண்டனர்.

நேரடி ஒளிபரப்பை எங்கே பார்ப்பது?
  • தொலைக்காட்சி: ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல்
  • மொபைல்: ஜியோஹாட்ஸ்டார் செயலி
  • ஒளிபரப்பு மதியம் 3:30 மணிக்கு தொடங்கும்.
© Copyright @2025 LIDEA. All Rights Reserved.