திருமணமான புதுமண தம்பதிகள் ஒருவரை ஒருவர் புரிந்துக்கொள்வது எவ்வளவு முக்கியமான ஒன்றோ, அதே அளவுக்கு முக்கியமான ஒரு விஷயம் உள்ளது. அதுதான், பொருளாதார கட்டமைப்பு. காரணம், பெரும்பாலான திருமண உறவுகளில் அதிக அளவு பிரிவு ஏற்படுவது பொருளாதாரத்தில் ஏற்படும் சிக்கல்களால் மட்டும்தான். எதிர்பாராத நேரங்களில் ஏற்படும் மருத்துவ செலவு, விபத்துக்கள் ஆகியவற்றை பொருளாதார ரீதியாக எதிர்க்கொள்ள காப்பீட்டு திட்டங்கள் (Insurance Schemes) மிகவும் அவசியமானவையாக உள்ளன. இந்த நிலையில், புதியதாக திருமணமானவர்கள் எடுக்க வேண்டிய காப்பீட்டு திட்டங்கள் குறித்து விரிவாக பார்க்கலாம்.
ஆயுள் காப்பீடு திட்டம்ஆயுள் காப்பீடு திட்டத்தில் (Life Insurance Scheme) முதலீடு செய்வது பொருளாதார பாதுகாப்பு மட்டுமன்றி, ஒருவர் மீது ஒருவருக்கு உள்ள அக்கறையை வெளிப்படுத்தும் செயலுமாகும். இந்த ஆயுள் காப்பீட்டு திட்டத்தின் மூலம் ஒருவருக்கு ஏதேனும் ஆபத்து ஏற்பட்டு உயிர் இழக்கும் அபாயம் ஏற்படும் பட்சத்தில், மற்றொருவர் எந்த ஒரு கடனும் இல்லாமல் தங்களது வாழ்க்கையை பொருளாதார பாதுகாப்புடன் வாழ இது வழிவகை செய்யும்.
இதையும் படிங்க : பணி நேரம் முதல் சலுகைகள் வரை.. தொழிலாளர் சட்டத்தில் வந்த முக்கிய மாற்றங்கள்!
மருத்துவ காப்பீட்டு திட்டம்மருத்துவ செலவுகள் உங்களது பொருளாதாரத்தை மிக சுலபமாக பாதித்துவிடும். நீங்கள் பல ஆண்டுகளாக சேமித்த பணம் கூட ஒரே ஒரு மருத்துவ செலவில் முழுவதுமாக தீர்ந்துவிடும். எனவே உங்களது மருத்துவ செலவுகள், உங்களின் பொருளாதாரத்தை பாதிக்க கூடாது என நீங்கள் நினைத்தால் மருத்துவ காப்பீடு (Medical Insurance) எடுப்பது உங்களுக்கு சிறந்த தேர்வாக இருக்கும். மருத்துவ காப்பீடு திட்டத்தில் முதலீடு செய்வது நீங்கள் உங்கள் மருத்துவ செலவுகளை ஈடு செய்வது மட்டுமன்றி, மருத்துவ செலவுகள் உங்கள் பொருளாதாரத்தை பாதிக்காத வகையில் பாதுகாப்பதும் ஆகும்.
இதையும் படிங்க : Home Loan : வீட்டு கடனை சுலபமாக அடைக்க சில டிப்ஸ்.. கண்டிப்பா ஃபாலோ பண்ணுங்க!
எனவே திருமணமான புதுமண தம்பதிகள் தங்களது எதிர்காலம் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்றால் இந்த காப்பீட்டு திட்டங்களில் முதலீடு செய்வது மிகவும் சிறந்ததாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.