அதிமுகவிலிருந்து நீக்கப்பட்ட முன்னாள் அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன், இன்று (நவ. 27) அதிகாரப்பூர்வமாக நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்தது குறித்து, அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.
அதற்குப் பதிலளித்த எடப்பாடி பழனிசாமி, “ஒருவர் கருத்தில் இன்னொருவர் தலையிட முடியாது” என்று சுருக்கமான பதிலளித்துவிட்டுச் சென்றார்.
“>
அதிமுகவின் மூத்த நிர்வாகிகளில் ஒருவர் கட்சி மாறி, பிரதான எதிர்க்கட்சிக்கு எதிராகப் புதிய கூட்டணியில் இணைந்திருக்கும் நிலையில், எடப்பாடி பழனிசாமி பதிலளிப்பதைத் தவிர்த்து, இப்படிச் சுருக்கமாகப் பேசியது அரசியல் வட்டாரத்தில் விவாதங்களைக் கிளப்பியுள்ளது.